அஜித் - ஷாலினி
தமிழ் சினிமாவில் காதல் நாயகனாக நடிக்கத் தொடங்கி இன்று தமிழ் சினிமாவில் மிகப் பெரிய நடிகராக இருப்பவர் அஜித். ஆரம்பக் காலங்களில் இவர் தொடர்ந்து காதல் படங்களில் நடித்து வந்தார். காதல் நாயகன், ஆசை நாயகன் என ரசிகர்களால் அன்பாக அழைக்கப்பட்டார். ஆரம்பக் காலத்தில் இவருக்கு அதிகமான பெண் ரசிகைகள் இருந்தார்கள் என்றால் பார்த்துக்கொள்ளுங்கள். அமராவதி, ஆசை, காதல் மன்னன், காதல் கோட்டை என ஏராளமான காதல் படங்களில் நடித்துள்ளார்.
தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக நடித்து பின்னர் நாயகியானவர் ஷாலினி. இவரும் அஜித்தும் இணைந்து நடித்த அமர்க்களம் படத்தில் தான் இருவருக்கும் காதல் மலர்ந்தது. படம் முடியும்போது இருவரும் பரஸ்பரம் காதலைப் பரிமாறிக் கொண்டனர். இருவரும் 2000ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டனர். திருமணத்திற்குப் பிறகு ஷாலினி சினிமாவில் நடிப்பதை நிறுத்திவிட்டார். இவர்களுக்கு ஒரு பெண் குழந்தையும் ஒரு ஆண் குழந்தையும் உள்ளனர்.
சூர்யா - ஜோதிகா
தமிழ் சினிமாவில் வாரிசு நடிகராக நுழைந்தாலும் தனது திறமையால் முன்னணி நடிகராக விளங்குபவர் சூர்யா. இவர் தன்னுடன் காக்க காக்க, சில்லுனு ஒரு காதல், மாயாவி ஆகிய படங்களில் நடித்த ஜோதிகாவுடன் காதல் ஏற்பட்டு திருமணம் செய்து கொண்டார். இருவரும் 2006ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். இன்று வரை சிறந்த நட்சத்திர ஜோடிகளாக வலம் வருகின்றனர். இந்த ஜோடிக்கு தியா, தேவ் என இரண்டு குழந்தைகள் உள்ளனர். ஜோதிகா தற்போது ஹீரோயினுக்கு முக்கியத்துவம் கொண்ட திரைப்படங்களில் நடித்து வருகிறார். மேலும் சூர்யா, ஜோதிகா இணைந்து 2டி என்டர்டெயின்மென்ட் என்ற தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கி நடத்தி வருகின்றனர்.
சினேகா - பிரசன்னா
சினேகா தமிழ் சினிமாவில் புன்னகை அரசி எனப் புகழப்படுபவர். இவருக்கு நடிகர் பிரசன்னாவும் அச்சமுண்டு அச்சமுண்டு என்ற திரைப்படத்தில் இணைந்து நடித்த போது காதல் மலர்ந்தது. இதனை அடுத்து இருவரும் 2012ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு இரு குழந்தைகள் உள்ளனர்.
சுந்தர் சி - குஷ்பூ
சுந்தர் சி முறை மாமன் படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார். அப்படத்தில் நாயகியாக நடித்த குஷ்புவுக்கும் சுந்தர் சி-க்கும் இடையே காதல் மலர்ந்தது. இதனைத் தொடர்ந்து இருவரும் 2000ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு இரண்டு மகள்கள் உள்ளனர்.
ராதிகா - சரத்குமார்
பாரதிராஜா இயக்கிய 'கிழக்கே போகும் ரயில்' திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் நாயகியாக அறிமுகமானார் நடிகை ராதிகா. பாரதிராஜாவின் கண்டுபிடிப்பு என்பது மட்டுமின்றி நடிகர் எம்.ஆர்.ராதாவின் வாரிசு என்பதாலும் நடிப்பு இவருக்குக் கைவந்த கலையாக இருந்தது. இவர் நடிகர் சரத்குமாரைக் காதலித்து மணமுடித்துக்கொண்டார். இவர்களது திருமணம் 2001ம் ஆண்டு நடைபெற்றது.
அட்லீ - பிரியா