சென்னை:சிம்பு நடிப்பில்கௌதம் மேனன் இயக்கத்தில் உருவாகி உள்ள வெந்து தணிந்தது காடு படத்தின் ஆடியோ மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு விழா நேற்று சென்னையில் நடந்தது. இந்த விழாவில் நடிகர்கள் கமல் ஹாசன், நாசர், ஜீவா, விக்ரம் பிரபு, சசி, ஆர்ஜே பாலாஜி, யோகி பாபு, இயக்குநர்கள் லிங்குசாமி, ஏ.எல்.விஜய், தயாரிப்பாளர் அன்புச் செழியன், பிக்பாஸ் ராஜூ, வருண் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
அப்போது பேசிய இயக்குநர் கௌதம் மேனன், ‘முதலில் நதிகளிலே நீராடும் சூரியன் என்றுதான் பெயர் வைத்து தொடங்கினோம். மூன்று மாதம் பணிபுரிந்தோம். ரஹ்மான் மூன்று பாடல்களை கொடுத்திருந்தார். ஜெயமோகனை பார்த்தபிறகு புதிய ஹீரோவை வைத்து எடுக்கலாம் என்று இருந்தோம். தயாரிப்பாளர் கதையை கேட்டு இப்படத்தை தயாரிக்க ஒப்புக்கொண்டார். ரஹ்மான் இப்படத்திற்கு புதிய பாடல்களை கொடுத்தார். இவர்கள் கொடுத்த சப்போர்ட்தான் இங்கு நிற்க காரணம்.
சிம்புவுடன் பணிபுரிவது எப்போதுமே எதிர்பார்ப்பாக இருக்கும். விண்ணைத்தாண்டி வருவாயா போன்று ஒரு குறும்படத்தை லாக்டவுனில் பண்ணினோம். சிம்பு நடித்துக்கொடுத்தார். இது உண்மையான மனிதரின் கதை. வாழ்க்கையை மூன்று மணியில் சொல்லியுள்ளது. இது இதனுடன் முடிவதல்ல தொடரும். எல்லோருடைய வாழ்விலும் பெண்கள் இல்லாமல் பகுதி இருக்காது. ஒரிஜினல் கதையில் காதல் இல்லை. அவருடைய அனுமதியுடன் காதலை இப்படத்தில் இணைத்தேன்.
ரஹ்மானுடன் சினிமா பற்றித்தான் பேசுவேன். இப்படம் பாடல்கள் நிறைந்த படம். தாமரை அழகான வரிகளை எழுதியுள்ளார். நல்ல அனுபவமாக இருந்தது. என்னுடைய கதாபாத்திரங்களில் கார்த்தியும் நான் தான். ஜெஸ்ஸியும் நான்தான். மறக்குமா நெஞ்சம் பாடல் நள்ளிரவு 2.30 மணிக்குத்தான் உருவானது என்த் தெரிவித்தார்.
அதன்பின் பேசியஏ.ஆர்.ரஹ்மான், "கௌதம் மேனன் ஒரு இசைக் காதலன். எது கொடுத்தாலும் எடுத்துக்கொள்வார். என்மேல் உள்ள நம்பிக்கை அது. தாமரை எழுதினால் அப்பாடலில் மேஜிக் நிகழ்ந்துவிடும். ஒரு பாடல் மாதிரி இன்னொன்று என்று கேட்டாலே அது பழசு ஆகிவிடும். புதுசுதான் வேண்டும். கௌதம் மற்றும் சிம்புவுக்காக இப்படத்தை ஒப்புக்கொண்டேன். இளையராஜா மற்றும் நான் இருவரும் ஒரே விமானத்தில் வந்தோம். இளையராஜா போட்டோ எடு என்றார். அதனால் தான் எடுத்தேன் எனத் தெரிவித்தார்.
இதனைத் தொடர்ந்து பேசிய நடிகை ராதிகா, ‘கௌதம் மேனன் மற்றும் அவரது குழுவிற்கு வாழ்த்துகள். இங்கு இரண்டு நாயகர்கள் உள்ளனர். ரகுமான் மற்றும் சிம்பு இருவரும்தான். சிம்புவை எனக்கு சின்ன வயதில் இருந்தே தெரியும். இப்படத்தில் அதிரடியான சிம்புவை பார்க்க போகிறீர்கள். படத்தில் டைனமிக்காக உள்ளார். ட்ரெய்லரை பார்த்து நன்றாக இருக்கிறது என்றேன். இப்படம் ரசிகர்களை ஆச்சரியப்படுத்தும் எனக் கூறினார்.
நடிகர் சிம்பு பேசுகையில்: ‘நான் இங்கு நிற்க காரணமான எனது ரசிகர்களுக்கு வணக்கம். இதுபோன்ற நிகழ்ச்சிகள் சமீபகாலங்களில் எனக்கு நடந்ததில்லை. வேறு ஒரு நிகழ்ச்சி என்று நினைத்தேன். நான் ஹெலிகாப்டரில் வரவில்லை. ஹெலிகாப்டர் மட்டும்தான் வந்தது. விக்ரம் படம் பார்ப்பதற்கு முன்பே இப்படம் சூப்பர் ஹிட் ஆகும் என்று நான் சொன்னேன்.
கமல்ஹாசன் சார் இங்கு வந்ததற்கு நன்றி. என்னுடைய பிரதர் யுவன் வந்ததற்கு நன்றி. அப்பா சிகிச்சைக்காக அமெரிக்கா சென்றது ஐசரி அவர்களால்தான் அவருக்கு ரொம்ப நன்றி. கௌதமும் நானும் மூன்றாவது முறையாக இணைந்துள்ளோம். இருவரும் இணைவது எனது மேஜிக். இதிலும் அந்த மேஜிக் நடக்கும். இந்த நிகழ்ச்சியின் நாயகன் ரஹ்மான் சார். யுவனை போல ரஹ்மானும் எனக்கு நல்ல பாடல்களை கொடுத்துள்ளார்.