தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / entertainment

தேசிய விருது வாங்கும் முதல் பழங்குடியினப் பாடகராகிறார் ’நாச்சியம்மா’ - நாச்சியம்மா

கேரளாவைச் சேர்ந்த பழங்குடியினப் பாடகரான நாச்சியம்மா தேசிய விருது வாங்கும் முதல் பழங்குடியினப் பாடகர் என்றப் பெருமையைப் பெற்றுள்ளார்.

தேசிய விருது வாங்கும் முதல் பழங்குடியினப் பாடகராகிறார் ’நாச்சியம்மா’
தேசிய விருது வாங்கும் முதல் பழங்குடியினப் பாடகராகிறார் ’நாச்சியம்மா’

By

Published : Jul 22, 2022, 10:51 PM IST

பாலக்காடு(கேரளா): 2020ஆம் ஆண்டிற்கான தேசிய திரைப்பட விருதுகள் இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதில், சிறந்த பாடகருக்கான விருதை ’ஐயப்பனும் கோஷியும்’ திரைப்படத்திற்காக பின்னணிப் பாடகி நாச்சியம்மா பெறவிருக்கிறார். இதன் மூலம் தேசிய விருது வாங்கும் முதல் பழங்குடியினப் பாடகராகிறார் நாச்சியம்மா.

இது குறித்து அவர் நமது ஈடிவி பாரத்திற்கு அளித்த பேட்டியில், “இந்த விருதை நான் எனது இயக்குநர் சச்சிக்கு சமர்ப்பிக்கிறேன். நான் இந்த மலைப் பகுதிகளில் ஆடு மாடு மேய்த்துக் கொண்டிருந்தேன். என்னை எவரும் அறியாதிருந்தனர்.

இயக்குநர் சச்சி தான் என்னையும் எங்கள் இசையையும் மக்களுக்கு அறிமுகப்படுத்தி வைத்தார். என்னை இந்த உலகிற்கு அறிமுகம் செய்து வைத்த சச்சி, தற்போது உலகை விடைபெற்றுவிட்டார். நான் என் இயக்குநர் சச்சி சாருக்காக இந்த விருதை மகிழ்ச்சியுடன் பெற்றுக்கொள்கிறேன்” எனப் பேசினார்.

இதையும் படிங்க: 2020ஆம் ஆண்டிற்கான தேசிய விருதுகளைப் பெறவுள்ள தமிழ் திரைப்படங்கள்

ABOUT THE AUTHOR

...view details