பாலிவுட்டில் ’அந்தாதூன்’, ‘பத்லாபூர்’, ‘ஜானி கதார்’ போன்ற சிறப்பான படங்களை இயக்கிய இயக்குநர் ஸ்ரீஇராம் ராகவன். இவரது இயக்கத்தில் நடிகர் விஜய் சேதுபதி நடிப்பில் புதிய படம் உருவாக இருப்பதாக வெகு நாட்களுக்கு முன் அறிவிக்கப்பட்டது. நடிகர் விஜய் சேதுபதி ஏற்கனவே ’மாநகரம்’ படத்தின் இந்தி ரீமேக்கில் முக்கிய கதாபாத்தித்தில் நடித்து வருகிறார்.
விஜய் சேதுபதி - கத்ரினா கைஃப் இணையும் படத்துக்கு ‘மேரி கிறிஸ்துமஸ்’ என பெயரிடப்பட்டுள்ளது - நடிகை கத்ரினா கைஃப்
நடிகர் விஜய் சேதுபதி நடிப்பில் பாலிவுட் இயக்குநர் ஸ்ரீஇராம் ராகவன் இயக்கத்தில் உருவாகிவரும் படத்தின் டைட்டில் வெளியிடப்பட்டுள்ளது.
![விஜய் சேதுபதி - கத்ரினா கைஃப் இணையும் படத்துக்கு ‘மேரி கிறிஸ்துமஸ்’ என பெயரிடப்பட்டுள்ளது விஜய் சேதுபதி - கத்ரினா கைஃப் இணையும் ‘மேரி கிறுஸ்துமஸ்’..!](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-17298274-thumbnail-3x2-merry.jpg)
இந்நிலையில், அவரே முதன்மை கதாபாத்திரமாக நடித்து உருவாகும் இயக்குநர் ஸ்ரீராம் ராகவன் படத்தின் டைட்டில் மற்றும் போஸ்டர் தற்போது அப்படக்குழுவினரால் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, இந்தப் படத்திற்கு ‘மேரி கிறிஸ்துமஸ்’ என பெயரிட்டுள்ளனர். இந்தப் படத்தில் நடிகர் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நடிகை கத்ரினா கைஃப் நடித்துள்ளார். இந்தப் படத்தில் நடிகை ராதிகா சரத்குமார் உட்பட பல்வேறு தமிழ் நடிகர்களும் நடித்துள்ளதாகத் தெரிகிறது.
இதையும் படிங்க:அத்து மீறும் அசீம்; கொந்தளிக்கும் நெட்டிசன்கள் - தட்டிக்கேப்பாரா கமல்