டிஸ்னி+ ஹாட்ஸ்டார் தனது அடுத்த ஹாட்ஸ்டார் ஸ்பெஷல் தொடரான, ‘ஃபால் ‘( Fall ) வெப் சீரிஸின் முதல் பார்வையை வெளியிட்டுள்ளது. ‘வெர்டிஜ்' (Vertige) என்ற விருது பெற்ற கனடிய மினி வெப் சீரிஸின் அதிகாரப்பூர்வ ரீமேக்கை, பனிஜய் ஆசியா தயாரித்துள்ளார்.
நடிகை அஞ்சலி, எஸ்பிபி சரண், சோனியா அகர்வால், சந்தோஷ் பிரதாப், நமிதா கிருஷ்ணமூர்த்தி, தலைவாசல் விஜய் மற்றும் பூர்ணிமா பாக்யராஜ் உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் இத்தொடரில் நடித்துள்ளனர்.