சென்னை:கோமளா ஹரி பிக்சர்ஸ் மற்றும் ஒன் ட்ராப் ஓசோன் பிக்சர்ஸ் நிறுவனங்களின் தயாரிப்பில், அறிமுகம் இயக்குநர் லயோனல் ஜோஸ்வா இயக்கத்தில், லிஜோமோல் ஜோஸ், லாஸ்லியா, 'மெட்ராஸ்' ஹரிகிருஷ்ணன் நடிப்பில் திரில்லர் டிராமாவாக உருவாகியுள்ள “அன்னபூரணி” திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகியுள்ளது.
இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை பிரபல இயக்குநர் வெற்றிமாறன் மற்றும் முன்னணி நடிகர் ஜெயம் ரவி ஆகியோர் சமூக வலைத்தளப்பக்கங்களில் வெளியிட்டனர். கதாபாத்திரங்களின் இயல்பையும், மாறுபட்ட கதைக்களத்தையும் வெளிப்படுத்தும்படியான இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியான வேகத்தில், திரை ரசிகர்களிடமும் வரவேற்பைப் பெற்றுள்ளது.
குடும்ப அமைப்பிற்குள் வாழும் ‘பூரணி’, குடும்ப அமைப்பிற்கு வெளியே வாழும் ‘அனா’ஆகிய இருவரின் பயணமே இந்தப்படம். பெண்கள் குடும்ப அமைப்பிற்குள் அனுபவிக்கும் சிரமங்களை, கருத்து சொல்லும்படியாக இல்லாமல் ரசிகர்களுக்கு பிடிக்கும் வண்ணம், ஒரு மாறுபட்ட திரில்லர் டிரமாவாக சொல்லியுள்ளது இப்படம்.