தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / entertainment

பல்வேறு பிரபலங்கள் இணைந்து வெளியிட்ட ரங்கோலி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் - ஆடுகளம் முருகதாஸ்

இயக்குநர் வாலி மோகன் இயக்கத்தில் புதுமுக நடிகர்கள் நடிக்கும் ரங்கோலி திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை 9 தமிழ்த்திரை பிரபலங்கள் இணைந்து வெளியிட்டனர்.

Etv Bharatபல்வேறு திரைபிரபலங்கள் இணைந்து வெளியிட்ட ரங்கோலி படத்தி பர்ஸ்ட் லுக்
Etv Bharatபல்வேறு திரைபிரபலங்கள் இணைந்து வெளியிட்ட ரங்கோலி படத்தி பர்ஸ்ட் லுக்

By

Published : Nov 13, 2022, 3:24 PM IST

Gopuram Studios தயாரிப்பில் இயக்குநர் வாலி மோகன் தாஸ் இயக்கத்தில் புதுமுக நடிகர்களின் நடிப்பில் தற்போதைய காலகட்ட பள்ளி வாழ்க்கையை மையமாக வைத்து உருவாகியுள்ள படம் “ரங்கோலி”.

இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை இயக்குநர் லோகேஷ் கனகராஜ், நடிகர் அருண் விஜய், இயக்குநர் வெங்கட் பிரபு, நடிகர் அதர்வா, இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ், நடிகர் சதீஷ், நடிகை வாணி போஜன், நவீன் சந்த்ரா கார்த்திக் ரத்னம் ஆகியோர் இணைந்து வெளியிட்டனர்.

மாநகரம், தெய்வத்திருமகள் படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்த ஹமரேஷ், இப்படத்தில் நாயகனாக அறிமுகம் ஆகிறார். பிரார்த்தனா, சாய் ஶ்ரீ, அக்‌ஷயா ஆகியோர் இப்படத்தில் முதன்மை பாத்திரங்களில் நடித்துள்ளனர்.

ரங்கோலி படத்தின் ஃபர்ஸ்ட் லுக்

ஆடுகளம் முருகதாஸ் முக்கிய பாத்திரமொன்றில் நடித்துள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு சென்னை மற்றும் கடப்பா ஆகிய இடங்களில் நடைபெற்றுள்ளது.

இதையும் படிங்க:"கொல்லிமலையில் நடந்த உண்மை சம்பவம்தான் 'நாடு'" - இயக்குநர் சரவணன்

ABOUT THE AUTHOR

...view details