தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / entertainment

Love is Political: வெளியானது ‘நட்சத்திரம் நகர்கிறது’ ஃபர்ஸ்ட் லுக் - Natchathiram Nagargiradhu

பா.ரஞ்சித் இயக்கத்தில் ‘நட்சத்திரம் நகர்கிறது’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது.

Love is Political: வெளியானது பா.ரஞ்சித்தின் ‘நட்சத்திரம் நகர்கிறது’ ஃபர்ஸ்ட் லுக்
Love is Political: வெளியானது பா.ரஞ்சித்தின் ‘நட்சத்திரம் நகர்கிறது’ ஃபLove is Political: வெளியானது பா.ரஞ்சித்தின் ‘நட்சத்திரம் நகர்கிறது’ ஃபர்ஸ்ட் லுக்ர்ஸ்ட் லுக்

By

Published : Jul 6, 2022, 6:35 PM IST

இயக்குநர் பா.ரஞ்சித் இயக்கத்தில் கடைசியாக வெளியான ’சார்பட்டா பரம்பரை’ திரைப்படம் ரசிகர்கள் மத்தியிலும், விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்ப்பை பெற்றது. தற்போது பா.ரஞ்சித் இயக்கியுள்ள ‘நட்சத்திரம் நகர்கிறது’ திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகியுள்ளது.

ரஞ்சித்தின் நீலம் புரொடக்‌ஷன்ஸ் மற்றும் யாழி ஃபிலிம்ஸ் இணைந்து தயாரித்துள்ள இந்த படத்தில் காளிதாஸ் ஜெயராம் மற்றும் சார்பட்டா பரம்பரையில் நடித்த துஷாரா விஜயன் ஆகியோர் முக்கிய கதாப்பத்திரத்தில் நடித்துள்ளனர்.

பொதுவாகவே சமூக அரசியல் சார்ந்த படங்களை இயக்கி வரும் பா.ரஞ்சித் அட்டக்கத்தி திரைப்படத்திற்கு பிறகு மீண்டும் காதல் கதை சார்ந்த படம் ஒன்றை இயக்கியுள்ளார். ஆனால், இந்த படமும் காதல் சார்ந்த அரசியலை வெளிப்படுத்தும் என பா.ரஞ்சித் கூறியிருந்தார், இந்நிலையில் படத்தின் போஸ்டரை Love is Political என்னும் தலைப்புடன் வெளியிட்டுள்ளார்.

இதையும் படிங்க:‘கதையில் மாற்றம் வேண்டும்’ - இயக்குநருக்கு கட்டளையிட்ட சிவகார்த்திகேயன்!

ABOUT THE AUTHOR

...view details