உலகம் முழுவதும் பிரபலாமன ஹலிவுட் நடிகரான டாம் க்ரூஸை வைத்து முதன் முதலாக விண்வெளியில் படப்பிடிப்பை நடத்தப்போவதாக யூனிவர்சல் தயாரிப்பு நிறுவனம் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து தனியார் செய்தி நிறுவனத்திற்கு பேட்டியளித்த யூனிவர்சல் ஸ்டுடியோவின் தலைவர் டேம் டோன்னா லேங்க்லி கூறுகையில், “டாம் குரூஸ் உலகை விண்வெளிக்கு அழைத்துச் செல்லவிருக்கிறார். டாம் க்ரூஸுடன் ஒரு சிறந்த திட்டம் உள்ளது.
ராக்கெட் மூலம் ஸ்பேஸ் ஸ்டேஷனுக்கு சென்று, ஸ்பேஸ் ஸ்டேஷனுக்கு வெளியே விண்வெளி நடைபயணம் செய்த முதல் குடிமகன் என்ற பெருமையை பெறவுள்ளார். இதற்காக ஒரு குழு தற்போது நாசா மற்றும் எலோன் மஸ்க்கின் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்துடன் இணைந்து சுமூகமான உற்பத்தியை உறுதி செய்து வருகிறது.