தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / entertainment

நடிகராக மாறிய இயக்குநர் சீனு ராமசாமி.. ரசிகர்கள் வரவேற்பு! - Fans welcomed Director Seenu Ramasamy

தங்கம் சினிமாஸ் தயாரிப்பில் விஜய் கார்த்திக் இயக்கத்தில் இயக்குநர் சீனு ராமசாமி நடிகராக அறிமுகமாகியுள்ளார். இவரது காட்சிகள் இன்று படமாக்கப்பட்டது.

Etv Bharat
Etv Bharat

By ETV Bharat Tamil Nadu Team

Published : Sep 29, 2023, 9:50 PM IST

சென்னை:இயக்குநர் சீனு ராமசாமி தென்மேற்குப் பருவக்காற்று, தர்மதுரை, இடிமுழக்கம் உள்ளிட்ட படங்களை இயக்கியுள்ளார். எளிய மனிதர்களின் வாழ்க்கையை படமாக இயக்கி வரும் இவரது படங்கள் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பைப் பெற்று வருகிறது. இந்த நிலையில் தங்கம் சினிமாஸ் தயாரிப்பில் சி.வி.குமார் உதவியாளர் விஜய் கார்த்திக் இயக்கத்தில் இயக்குநர் சீனு ராமசாமி நடிகராக அறிமுகமாகியுள்ளார்.

தங்கம் சினிமாஸ் சார்பில் எஸ்.தங்கராஜ் மிகுந்த பொருட்செலவில் தயாரிக்கும் புதிய திரைப்படத்தை பிரபல தயாரிப்பாளர் இயக்குநர் சி.வி.குமாரிடம் உதவி இயக்குநராக பணிபுரிந்த விஜய் கார்த்திக் எழுதி இயக்குகிறார். தேசிய விருது பெற்ற வெற்றிப்பட இயக்குநர் சீனு ராமசாமி இப்படத்தின் மூலம் நடிகராக அறிமுகம் ஆகிறார்.

நடிகராக மாறிய இயக்குநர் சீனு ராமசாமி

முதல் காட்சியை சி.வி.குமார் இயக்க இப்படத்தின் படப்பிடிப்பு சென்னையில் இன்று இனிதே தொடங்கியது. எல்லா காலகட்டத்திற்கும் பொருந்தும் கதைக்களத்தில் இத்திரைப்படம் உருவாகிறது. இப்படத்தின் கதாநாயகனாக அருண் நடிக்க அவரது ஜோடியாக நிரஞ்சனா நடிக்கிறார். இவர்களுடன் யூடியூப் புகழ் விஜய் டியூக், ஷிமோர் ரூஸ்வெல்ட் மற்றும் பலர் நடிக்கின்றனர். நடிகராக அறிமுகம் ஆகும் சீனு ராமசாமி மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த பாத்திரம் ஒன்றில் நடிக்கிறார். அவரது காட்சி இன்று படமாக்கப்பட்டது.

புதிய சமுதாய மாற்றத்திற்கான வழிகாட்டியாக இப்படம் அமையும் என்று இயக்குநர் விஜய் கார்த்திக் நம்பிக்கையுடன் தெரிவிக்கிறார். பாதிக்கப்பட்டவர்களின் பக்கம் நிற்பதே சமூகநீதி என்ற கருத்தை ஆழமாகவும், அழுத்தமாகவும் இத்திரைப்படம் பதிவு செய்யும் என்று அவர் கூறினார்.

படமாக்கப்பட்ட சீனு ராமசாமி காட்சிகள்

சென்னையில் இன்று தொடங்கிய படப்பிடிப்பில் நூற்றுக்கணக்கான துணை நடிகர் நடிகைகள் பங்கு பெற்ற நிலையில் முக்கிய காட்சிகள் படமாக்கப்பட்டன. தொடர்ந்து விழுப்புரம், கோவை, பொள்ளாச்சி உள்ளிட்ட இடங்களில் படப்பிடிப்பு நடைபெற உள்ளது. இப்படத்தின் ஒளிப்பதிவை ஏ.எஸ்.சூரியா கவனிக்க, படத்தொகுப்பை வி.பி.வெங்கட் கையாளுகிறார், எஸ்.ஆர்.ஹரி இசையமைக்கிறார், ஸ்வேதா தங்கராஜ் உடைகளை வடிவமைக்கிறார்.

இதையும் படிங்க:கர்நாடகாவில் நடைபெற்ற நிகழ்வில் வெளியேற்றப்பட்ட நடிகர் சித்தார்த் - மன்னிப்பு கோரிய கன்னட நடிகர்கள்!

ABOUT THE AUTHOR

...view details