தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / entertainment

சபரிமலையில் 'வாரிசு' விஜய் ரசிகர்கள் கொண்டாட்டம்! - ajith

நடிகர் விஜய் நடித்த வாரிசு திரைப்படம் வெற்றி பெற வேண்டி சபரிமலை ஐயப்பன் கோவிலில் அவரது ரசிகர்கள் வாரிசு பட போஸ்டருடன் பிரார்த்தனை செய்தனர்

வாரிசு திரைப்படம் வெற்றி பெற வேண்டி சபரிமலையில் ரசிகர்கள் பிரார்த்தனை
வாரிசு திரைப்படம் வெற்றி பெற வேண்டி சபரிமலையில் ரசிகர்கள் பிரார்த்தனை

By

Published : Nov 30, 2022, 10:55 PM IST

தேனி: தமிழ்நாட்டில் முன்னணி நடிகர்கள் படம் வெளியாகும் போது அவர்களது ரசிகர்கள் அந்தப் படம் வெற்றி பெற வித்தியாசமாக விளம்பரம் செய்வது தற்போது வாடிக்கையாகி வருகிறது.

கடந்த வாரம் சபரிமலை ஐயப்பன் கோவிலில் நடிகர் அஜித் நடிப்பில் வெளியாக உள்ள துணிவு திரைப்படம் வெற்றி பெற வேண்டி அவர்களது ரசிகர்கள் துணிவு பட போஸ்டர் உடன் சபரிமலை ஐயப்பன் கோவிலில் பிரார்த்தனை செய்தனர்.

இதே போல் பொங்கலுக்கு வெளியாக உள்ள விஜய் நடித்த வாரிசு திரைப்படம் வெற்றி பெற வேண்டி பண்ருட்டியை சேர்ந்த விஜய் ரசிகர்கள் வாரிசு பட போஸ்டருடன் சபரிமலை ஐயப்பன் கோவிலில் பிரார்த்தனையில் ஈடுபட்டனர். சமூக வலைத்தளத்தில் அஜித் மற்றும் விஜய் ரசிகர்களிடையே ஏற்பட்டு வந்த போட்டி தற்போது சபரிமலையிலும் தொடர்கிறது.

இதையும் படிங்க: சந்திரமுகியாக நடிக்கும் கங்கனா ரனாவத்..!

ABOUT THE AUTHOR

...view details