தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / entertainment

பிரபல நடிகை அயிந்திரில்லா ஷர்மா(24) மரணம்! - பெங்கால் நடிகை ஷர்மா

பெங்கல் திரையுலங்கில் பிரபல நடிகையான அயிந்திரில்லா ஷர்மா(24) மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார்.

Etv Bharat
Etv Bharat

By

Published : Nov 20, 2022, 5:25 PM IST

கொல்கத்தா:பெங்கால் திரையுலகில் பிரபல நடிகையான 24 வயது அயிந்திரில்லா ஷர்வா கொல்கத்தாவில் வசித்து வந்தார். சிறிய வயதில் இருந்தே புற்றுநோய் பாதிப்பால் தவித்து வந்த அயிந்திரில்லா ஜுமுர் என்ற டிவி தொடர் மூலம் அறிமுகமாகி பின்நாளில் அமி தீதி நெம்பர்-1, லவ் கஃபே உள்ளிட்ட திரைப்படங்களில் நடத்தி புகழ்பெற்றார்.

இந்த நிலையில் கடந்த 14-ம் தேதி திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. உடனடியாக அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இதனிடையே, அயிந்திரில்லா ஷர்மா குணமடைந்து வீடு திரும்ப வேண்டும் எனக்கூறி Pray for Aindrila என்ற ஹேஸ்டெக்கை அவரது ரசிகர்கள் டிவிட்டரில் டிரெண்டாக்கினர்.

ஆனாலும் இன்று(நவ.20) ஞாயிற்றுக்கிழமை அயிந்திரில்லா ஷர்மா சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதனால் அதிர்ச்சியடைந்துள்ள பெங்கால் திரையுலகத்தினர் பலரும் அவருக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

பிரபல நடிகை அயிந்திரில்லா ஷர்மா(24) மரணம்!

மாரடைப்பு என்பது 60 வயதை கடந்தவர்களுக்கு மட்டுமே ஏற்பட்ட நிலைமாறி தற்போது 20 வயது 25 வயது என இளம் தலைமுறையினருக்கு மாரடைப்பு ஏற்படுவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க:'வதந்தி' வெப் சீரிஸில் அறிமுகமாகும் நடிகை சஞ்சனா!

ABOUT THE AUTHOR

...view details