சென்னை: ஜெமினி, வின்னர், அன்பே சிவம், வில்லன், முத்தின கத்திரிக்கா, ஆம்பள உள்ளிட்ட படங்களில் நடித்தவர் நடிகை கிரண். திருமலை உள்ளிட்ட சில படங்களில் குத்து பாடலுக்கு நடனமும் ஆடியுள்ளார். இவரது கவர்ச்சிக்கென தனி ரசிகர் பட்டாளம் உள்ளது.
ஆனால் சமீபகாலமாக பட வாய்ப்புக்கள் இல்லாததால், தனது பெயரில் ஒரு செயலியை அறிமுகப்படுத்தி கல்லா கட்டிவருகிறார். இந்த செயலியைப் பயன்படுத்த வாடிக்கையாளர்கள் ரூ.49 கட்டணம் செலுத்த வேண்டும். அதில் கவர்ச்சி படங்கள், வீடியோ உள்ளிட்டவைகளுக்கு தனித்தனி கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.