தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / entertainment

படப்பிடிப்பின் போது பிரபல நடிகர், நடிகை காயம்! - நடிகர் விஜய் தேவரகொண்டா

காஷ்மீரில் உள்ள பிரபல சுற்றுலாத் தலமான பஹல்காமில் நடைபெற்ற படப்பிடிப்பில் முன்னணி நடிகை சமந்தா மற்றும் நடிகர் விஜய் தேவரகொண்டா ஆகியோர் சண்டை காட்சிகளில் நடிக்கும் போது காயம் அடைந்தனர்.

படப்பிடிப்பின் போது பிரபல நடிகர் நடிகை காயம்!
படப்பிடிப்பின் போது பிரபல நடிகர் நடிகை காயம்!

By

Published : May 24, 2022, 6:25 AM IST

பிரபல நடிகர்களான சமந்தா மற்றும் விஜய் தேவரகொண்டா ஆகியோர் நடிக்கும் குஷி படத்தின் இறுதி கட்ட காட்சிகள் தெற்கு காஷ்மீரின் பஹல்காமில் நடைபெற்றது.

அப்போது சண்டை காட்சியை படமாக்கும் போது, அதில் அவர்களுக்கு காயம் ஏற்பட்டது. இரண்டு நடிகர்களும் வேகமாக ஓடும் ஆற்றின் இருபுறமும் கட்டப்பட்ட கயிற்றின் மீது வாகனத்தை இயக்க வேண்டிய காட்சியில் திடீரென வாகனம் ஆழமான நீரில் கீழே விழுந்தது. இந்த விபத்தில் இருவருக்கும் முதுகில் காயம் ஏற்பட்டது.

இதையடுத்து அவர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் அவர்கள் உடனடியாக விடுதிக்கு மாற்றப்பட்டு பிசியோதெரபிஸ்டு வரவழைக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது.

குஷி படம் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளில் வரும் டிசம்பர் 23ஆம் தேதி வெளியாகிறது.

இதையும் படிங்க :நாளை வெளியாகிறது தனுஷின் 'தி க்ரே மேன்' ட்ரெய்லர்!

ABOUT THE AUTHOR

...view details