ஆஸ்கர் மேடை ஏறியபோது எப்படி உணர்ந்தீர்கள்?
இந்தியாவின் பெருமையையும், தெலுங்கு இலக்கியத்தின் மானத்தையும் கையில் வைத்திருப்பதாகத் தோன்றியது. அந்த தருணத்தை விவரிக்க முடியாததாக உணர்கிறேன். கோல்டன் குளோப் மற்றும் பிற சர்வதேச விருதுகள் பெற்றபோது, ஆஸ்கர் விருதும் நிச்சயம் கிடைக்கும் என்ற நம்பிக்கை இருந்தது.
ஆஸ்கார் விருது பற்றி எப்போதாவது கனவு கண்டீர்களா?
ஆஸ்கர் பற்றி எனக்கு எந்த கனவும் இல்லை. ஆனால், தேசிய விருது பற்றி நிறைய கனவு கண்டிருக்கிறேன். ஒருமுறையாவது தேசிய விருது வாங்க வேண்டும் என்பதே என் வாழ்க்கையின் லட்சியமாகவும் கனவாகவும் இருந்தது. அதை நிறைவேற்றுவதற்கு முன் கோல்டன் குளோப், விமர்சகர்களின் சாய்ஸ், ஹாலிவுட் விமர்சகர்கள் சங்கம் மற்றும் ஆஸ்கார் விருதுகள் என நான்கு சர்வதேச விருதுகள் வாங்கிவிட்டேன்.
இதுவரை பல சிறந்த பாடல்களை எழுதியுள்ளீர்கள், 'நாட்டு நாட்டு' பாடலுக்கு ஆஸ்கர் விருது கிடைத்தது பற்றி உங்கள் கருத்து என்ன?
இம்முறை ஆஸ்கர் விருது பொறுமைக்கும் இலக்கியத்துக்கும் கிடைத்த விருதாகக் கருதுகிறேன். என்னுடைய 27 வருட எழுத்துப் பயணத்தில் எந்த ஒரு பாடலும் 19 மாதங்களாக எழுதியதில்லை. எந்தப் பாடலையும் நான்கைந்து நாட்களில் முடித்து விடுவேன். அதிகபட்சமாக ஒருமாதம் கூட ஆகியுள்ளது. ஆனால் நாட்டு நாட்டு பாடலை எழுதி முடிக்க 19 மாதங்கள் ஆனது. பொறுமை இழக்காமல், மிகவும் கவனமாக ஒவ்வொரு வார்த்தையையும் பார்த்து பார்த்து எழுதினேன். அதனால் தான், இலக்கியத்துடன், பொறுமைக்கும் சேர்த்து விருது வழங்கப்பட்டிருப்பதாக கூறினேன்.
தெலுங்கு பாடல் ஆஸ்கர் வென்றுள்ளதை பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
இந்தியத் திரைப்படங்களில் உள்ள சூழ்நிலைகள், காட்சிகள், உணர்வுகள் வேறு எங்கும் இல்லை என்று தோன்றுகிறது. அதனால் தான் நம் படங்களில் பல வகையான பாடல்கள் உள்ளன. தெலுங்கில் எடுத்துக்கொண்டால், பல சந்தர்ப்பங்களில் பாடல்கள் எழுதியிருக்கிறேன். உத்வேகம், பக்தி, காதல், ஏமாற்றம், பிரிவு, காதல், கலவரம், மொழி, கலாச்சாரம், நகைச்சுவை, வேடிக்கை இப்படி எல்லாச் சந்தர்ப்பங்களுக்காகவும் பாடல் எழுதியுள்ளேன். நாம் உயரிய நிலையை அடைய, ஒரு வழி இருக்கிறது என்பதை உணர நேரம் பிடித்தது. ஆனால், நம் இலக்கியத்தில் சூழ்நிலைகளில், உணர்வுகளில் அவை இல்லாமல் இல்லை.
சர்வதேச அளவிலான உணர்வுகள் பெரும்பாலும் நம் படங்களில் உள்ளன. அங்கே நம் பாடலை எடுத்துச் செல்ல வழிகாட்டி வேண்டும். அப்போது தான் எல்லாம் சாத்தியமாகும்? 'ஆர்ஆர்ஆர்' திரைப்படம் உண்மையில் அதை சாத்தியமாக்கியது. இயக்குனர் ராஜமௌலியின் 'நாட்டு நாட்டு' பாடல் இவ்வளவு தூரம் சென்றது. நமது முன்னோர்களும் எனது சமகாலத்தவர்களும் சிறந்த நிகழ்வுகளுக்கு சிறந்த பாடல்களை எழுதியுள்ளனர். நம்மிடம் ஒரு சிறந்த இலக்கியம் மற்றும் இசை மொழி இருக்கிறது என ஆஸ்கர் மூலம் உணர்த்தியுள்ளோம்.
ஒரு ஆஸ்கர் விருது உங்களிடமும், உங்கள் எழுத்து வாழ்க்கையிலும் எந்த மாதிரியான தாக்கத்தை ஏற்படுத்தும் என்று நினைக்கிறீர்கள்?
ஆஸ்கர் விருது மூன்றரை கிலோ எடையும், கோல்டன் குளோப் விருது ஏழு கிலோ எடையும், கிரிட்டிக்ஸ் சாய்ஸ் ஆறு கிலோ எடையும் உள்ளது. இப்போது மேலும் 20, 30 கிலோ குறைந்துள்ளேன். அதனால் தான் கவனமாக இருக்க வேண்டும் என காமெடியாக பதிலளித்தார்.
இதையும் படிங்க: இசையமைத்த முதல் படம் வெளியாகவில்லை; ஆனால் இன்று ஆஸ்கர் நாயகன்.. கீரவாணி கடந்து வந்த பாதை!