தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / entertainment

நயன்தாரா திருமண உடையின் சிறப்பம்சங்கள்..! - நயன்தாரா

நடிகை நயன்தாரா - விக்னேஷ் சிவன் திருமணம் இன்று(ஜூன் 9) சென்னை மகாபலிபுரத்தில் பிரமாண்ட முறையில் நடந்து முடிந்துள்ளது.

நயன்தாரா திருமண உடையின் சிறப்பம்சங்கள்..!
நயன்தாரா திருமண உடையின் சிறப்பம்சங்கள்..!

By

Published : Jun 9, 2022, 5:24 PM IST

நடிகை நயன்தாரா - இயக்குநர் விக்னேஷ் சிவன் ஜோடியின் திருமணம் இன்று(ஜூன் 9) மாபெரும் பொருட்செலவில் நடைபெற்றது. இந்நிலையில், அவர்களின் திருமண உடைகளின் சிறப்பம்சங்களை அதை வடிவமைத்த தனியார் நிறுவனத்தார் அவர்களின் இணையப் பக்கத்தில் வெளியிட்டுள்ளனர்.

அதில் அவர்கள் தெரிவித்துள்ள தகவலின்படி, 'நயன்தாரா குங்கும சிவப்பு நிற சேலை அணிந்து மணமேடையில் அமர்ந்தார். அந்தச் சேலையின் எம்பராய்ட்ரி வடிவம் கர்நாடகாவில் உள்ள ஹொய்சாலா கோயிலின் சிற்பங்களின் தாக்கத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளது. சேலையின் ப்ளவுஸில்மகாலட்சுமியின் வடிவம் வடிவமைக்கப்பட்டுள்ளது.

மேலும், அதில் திருமண ஜோடிகளின் பெயர்களும் பொறிக்கப்பட்டுள்ளன. இது ஜோடிகளின் இடையே ஒற்றுமை, பொறுப்பு, பரஸ்பர மரியாதை ஆகியவற்றைக் குறிக்கும் விதமாக வடிவமைக்கப்பட்டுள்ளது' என இந்த உடைகளை வடிவமைத்த தனியார் வடிவமைப்பு நிறுவனம் தங்களது இணைய பக்கத்தில் தெரிவித்துள்ளனர்.

இதையும் படிங்க: நயன்தாரா - விக்னேஷ் சிவன் திருமணம்: வெளியானது முதல் புகைப்படம்

ABOUT THE AUTHOR

...view details