நடிகர் கவினுக்கு கல்யாணம்:தனியார் தொலைகாட்சியில் மெகாதொடர் மூலம் அறிமுகமானவர். அதில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்று தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தை உருவாக்கிக் கொண்டார். அதனை தொடர்ந்து சினிமாவில் சின்ன சின்ன வேடங்களில் நடித்து வந்தவர் லிஃப்ட் படத்தின் மூலம் நாயகனாக அறிமுகமானார். அந்த படம் இவருக்கு ரசிகர்களிடம் நல்ல பெயரை பெற்றுத் தந்தது.
அதனை தொடர்ந்து இவர் நடித்த டாடா திரைப்படம் மிகப் பெரிய வெற்றியை பெற்றது. மிகச் சிறிய முதலீட்டில் எடுக்கப்பட்ட இந்த படம் அனைவரும் விரும்பும் படமாக அமைந்தது. மேலும் இதில் கவினின் நடிப்பு மிகவும் பாராட்டப்பட்டது. இவர் தன் காதலியான மோனிகாவை வரும் ஆகஸ்ட் 20ஆம் தேதி மணக்கவுள்ளார். நடிகர் கவினின் ரசிகர்கள் சமூக வலைதளத்தில் வாழ்த்துக்களைத் தெரிவித்து வருகின்றனர். நடிகர் கவின் தற்போது நடன இயக்குநர் சதீஷ் இயக்கத்தில், இசையமைப்பாளர் அனிருத் இசையில் நடித்து வருகிறார்.
செல்வராகவன், யோகிபாபு இணையும் அரசியல் படம்:செல்வராகவன், யோகி பாபு நடிக்கும் புதிய திரைப்படம், தென் தமிழக அரசியலை மையமாகக் கொண்ட படத்தை ஜி ஏ ஹரிகிருஷ்ணன் தயாரிக்க ரெங்கநாதன் இயக்குகிறார். சமீப காலமாக நடிப்பில் கவனம் செலுத்தி அதிலும் தனக்கென தனி முத்திரை பதித்து வரும் இயக்குநர் செல்வராகவன், மொமென்ட் என்டர்டெயின்மென்ட்ஸ் பேனரில் ஜி ஏ ஹரிகிருஷ்ணன் மற்றும் துர்கா தேவி ஹரிகிருஷ்ணன் தயாரிக்க புதுமுக இயக்குநர் ரெங்கநாதன் இயக்கும் படமொன்றில் முதன்மை வேடத்தில் நடிக்கிறார்.
யோகி பாபு, பிரபல தெலுங்கு நடிகர் சுனில், மலையாள நடிகர் ஷைன் டாம் சாக்கோ, ராதாரவி மற்றும் வினோதினி உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடிக்கும் இன்னும் பெயரிடப்படாத இப்படத்தில் இயக்குநர் ராஜீவ் மேனனின் மகள் சரஸ்வதி மேனன் நாயகியாக அறிமுகம் ஆகிறார்.
ஆழ்ந்த இரங்கல் எதிர்ப்பு பதிவு - இயக்குநர் பேரரசு ஆதங்கம்:இதுகுறித்து இயக்குனர் பேரரசு அளித்துள்ள அறிக்கையில் ”ஒரு கட்சியினர் அரசியல் எதிர்ப்பை காட்டுவதற்கு கருப்பு கொடி காட்டுவது, GO BACK என்று சொல்லுவது, ஒழிக ஒழிக என்று கோஷம் எழுப்புவது இதெல்லாம் சகஜம். இதே எதிர்ப்புமுறை அந்தக் கட்சியினருக்கு திரும்புவதும் சகஜம். ஆனால் இந்த *ஆழ்ந்த இரங்கல்* என்ற எதிர்ப்பு பதிவு அப்படி பார்த்து விட முடியாது. இன்று இது அண்ணாமலை அவர்களின் நடை பயணத்திற்கு எதிரானதாக இருக்கலாம்.