சென்னை: புதுமுக இயக்குநர் எஸ்.கே. வெற்றிச்செல்வன் இயக்கியுள்ள படம் ’எண்ணித்துணிக’, இப்படத்தில் ஜெய், அதுல்யா ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இசையமைப்பாளராக சாம் சி.எஸ், எடிட்டராக சாபு ஜோசப், ஒளிப்பதிவாளராக ஜே.பி. தினேஷ்குமார் ஆகியோர் பணியாற்றியுள்ளனர்.
விரைவில் வெளியாகிறது ”எண்ணித்துணிக” - cinema
ஜெய் நடித்துள்ள ”எண்ணித்துணிக” படத்தின் தமிழ்நாடு வெளியீட்டு உரிமையை எம்எஸ்எம் மூவிஸ் டிரேடர்ஸ் கைப்பற்றியுள்ளது.
விரைவில் வெளியாகிறது ஜெய் நடிக்கும் ”எண்ணித்துணிக”
ரெயின் ஆஃப் ஏரோ என்டர்டெயின்மென்ட்(Rain of Arrow Entertainment) சார்பில் சுரேஷ் சுப்பிரமணியன் இப்படத்தை தயாரிக்கிறார். ஜெய் நடிப்பில் பட்டாம்பூச்சி படம் சமீபத்தில் வெளியானது. இதனை தொடர்ந்து எண்ணித்துணிக திரைப்படம் வெளியாக உள்ளது. இந்நிலையில் இப்படத்தின் தமிழ்நாடு திரையரங்க வெளியீட்டு உரிமையை எம்எஸ்எம் மூவிஸ் டிரேடர்ஸ் கைப்பற்றியுள்ளது.
இதையும் படிங்க:'துப்பாக்கி' பாண்டியனாக ஜி.பி.முத்து: இறுதிகட்டப்படப்பிடிப்பில் "பம்பர்"