சென்னை:இயக்குநர்பாரதிராஜா இயக்கத்தில் 1990ஆம் ஆண்டு வெளியான 'என் உயிர் தோழன்' படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகர் பாபு. கடந்த 20 வருடங்களுக்கு மேல் உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டு படுத்தப்படுக்கையாக இருந்த நடிகர் பாபு இன்று (செப் 19) காலமானார்.
படப்பிடிப்பின் சண்டைக் காட்சி ஒன்றிற்காக மாடியில் இருந்து குதித்த போது முதுகு எலும்பு உடைந்தது. பின்னர், திரை வாழ்க்கையே மூழ்கிபோய் 20 ஆண்டுகளுக்கும் மேலாக படுக்கையிலேயே தவித்து வந்துள்ளார் நடிகர் பாபு. நடிகர் பாபுவின் மரணத்திற்கு இயக்குநர் பாரதிராஜா தனது X தளத்தில் இரங்கல் தெரிவித்துள்ளார்.
அதில் அவர், "திரைத்துறையில் மிகப்பெரும் நட்சத்திரமாக வந்திருக்க வேண்டியவன் படப்பிடிப்பில் நடந்த விபத்தில் 30 வருடத்திற்கு மேலாக படுக்கையிலேயே தன்னம்பிக்கையுடன் வாழ்ந்து மறைந்த "என் உயிர் தோழன் பாபு"வின் மறைவு மிகுந்த மனவேதனை அளிக்கிறது. ஆழ்ந்த இரங்கல்" என பதிவிட்டு உள்ளார்.