’சின்னா’, விஜயின் ‘தெறி’, கமலின் ‘விக்ரம்’ உள்ளிட்ட பல படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் நடிகர் ஸ்ரீ. பல வெற்றிபெற்ற தொலைக்காட்சி தொடர்களில் ஹீரோவாகவும் நடித்து வருகிறார். ‘யாரடி நீ மோகினி’ உள்ளிட்டப் பல தொடர்கள் மூலம் தமிழ்நாட்டின் பட்டிதொட்டியெல்லாம் அறியப்பட்ட நடிகர் ஸ்ரீ ‘ஈடாட்டம்’ என்ற திரைப்படத்தில் ஹீரோவாக நடித்திருக்கிறார்.
ஈசன் மூவிஸ் சார்பில் சக்தி அருண் கேசவன் தயாரிக்கும் இப்படத்தின் கதை எழுதி ஈசன் இயக்கியிருக்கிறார். இப்படத்தில் வெண்பா, அனுகிருஷ்ணா, தீக்ஷிகா ஆகிய மூன்று பேர் ஹீரோயின்களாக நடித்திருக்கிறார்கள். இவர்களுடன் ராஜா, விஜய் விசித்திரன், காதல் சுகுமார், பவர் ஸ்டார், பூவிலங்கு மோகன், விஜய் சத்யா உள்ளிட்டப் பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.
வறுமையில் வாழும் ஒருவர் பணத்தேவைக்காக தவறான முடிவுகளை எடுக்கிறார். அதனால், அவர் மட்டும் இன்றி அவரை சார்ந்தவர்களும் எப்படி பாதிக்கப்படுகிறார்கள் என்ற மெசேஜை காதல், காமெடி, சென்டிமென்ட் என கமர்ஷியலாக சொல்வது தான் இப்படத்தின் கதை எனக் கூறப்படுகிறது.