நடிகர் நானி தொடர்ந்து வெற்றிப்படங்களாக தந்து வருகிறார். இந்நிலையில் நானியின் முதல் பான் இந்திய திரைப்படமாக உருவாகிறது ‘தசரா’ திரைப்படம். ஶ்ரீ லக்ஷ்மி வெங்கடேஸ்வரா சினிமாஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் சுதாகர் செருகுரி இப்படத்தை தயாரிக்கிறார்கள். அறிமுக இயக்குநர் ஶ்ரீகாந்த ஒதெலா இயக்குகிறார்.
நடிகர் நானி, தனது வழக்கமான நவ நாகரீக தோற்றத்திலிருந்து முற்றிலுமாக மாறி ஒரு கிராமிய கேரக்டரில் நடிக்கிறார். இந்த கேரக்டரில் நடிப்பதற்காக அவர் நிறைய பயிற்சி எடுத்து தன்னை முழுமையாக கிராமத்து மனிதனாக மாற்றிக்கொண்டுள்ளார். இப்படத்தின் அறிவிப்பு வீடியோவில் அவரது தெலுங்கானா பேச்சு வழக்கு மொழி அனைவரையும் ஆச்சர்யப்பட வைத்தது.
இத்திரைப்படம் ஸ்ரீராம நவமி கொண்டாட்ட வெளியீடாக, 4 நாட்கள் நீண்ட வார விடுமுறையை ஒட்டி 30 மார்ச் 2023 அன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது. எல்லா மொழிகளிலும் படம் வெளியாவதற்கு இது சரியான தேதியாக இருக்கும்.
பட வெளியீடு குறித்த அறிவிப்பு போஸ்டரில் நாயகன் நானி தூசி படிந்த கைலி சட்டையுடன் அதிரடியான கிராமத்து லுக்கில் அசத்தலாக இருக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு நேற்று ஹைதராபாத்தில் மீண்டும் தொடங்கியுள்ளது. படத்தின் முன்னணி நடிகர்கள் அனைவரும் படப்பிடிப்பில் கலந்து கொண்டுள்ளார்கள். இப்படத்தில் நானிக்கு ஜோடியாக தேசிய விருது பெற்ற நடிகை கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார்.
படத்தின் கதை பெத்தபள்ளி மாவட்டத்தில் உள்ள கோதாவரிகானியில் (தெலுங்கானா) சிங்கரேணி நிலக்கரி சுரங்கத்தில் அமைந்துள்ள ஒரு கிராமத்தில் நடப்பதாக அமைக்கப்பட்டுள்ளது. சத்யன் சூரியன் ISC ஒளிப்பதிவு செய்ய சந்தோஷ் நாராயணன் இசையமைக்கும் இப்படத்தில் சமுத்திரக்கனி, சாய் குமார் மற்றும் ஜரீனா வஹாப் ஆகியோர் முக்கியமான பாத்திரங்களில் நடிக்கிறார்கள்.
இப்படத்தில் நவின் நூலி எடிட்டராகவும், அவினாஷ் கொல்லா தயாரிப்பு வடிவமைப்பாளராகவும், விஜய் சாகந்தி நிர்வாக தயாரிப்பாளராகவும் பணியாற்றுகிறார்கள். “தசரா” திரைப்படம் தெலுங்கு, தமிழ், கன்னடம், மலையாளம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் வெளியாகிறது.
இதையும் படிங்க:தள்ளிப்போகிறது பிசாசு 2 படத்தின் வெளியீடு