தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / entertainment

டிரைவர் ஜமுனா ரிலீஸ் தேதி தள்ளிவைப்பு!

டிரைவர் ஜமுனா திரைப்படத்தின் ரிலீஸ் தேதி தள்ளிவைக்கப்பட்டுள்ளது.

Driver Jamuna release date postponed
Driver Jamuna release date postponed

By

Published : Nov 10, 2022, 3:33 PM IST

சென்னை:18 ரீல்ஸ் SP சௌத்ரி தயாரிப்பில் இயக்குநர் P கின்ஸ்லின் இயக்கத்தில் நடிகை ஐஷ்வர்யா ராஜேஷ் நடித்துள்ள படம் 'டிரைவர் ஜமுனா'. இப்படத்திற்கு ஜிப்ரான் இசை அமைத்துள்ளார். ஒரு பெண் டாக்ஸி ஓட்டுநர் தனது பயணத்தின்போது எதிர்கொள்ளும் பிரச்னைகள் குறித்தும், வியத்தகு நிகழ்வுகள் குறித்தும், உருவாகியுள்ளதாக கூறப்படுகிறது. இப்படம் நாளை திரையரங்குகளில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால், தற்போது இதன் வெளியீட்டுத் தேதி தள்ளிவைக்கப்பட்டுள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது.

இதுகுறித்து படக்குழு சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், 'நவம்பர் 11ஆம் தேதியன்று வெளியாவதாக இருந்த எங்கள் "டிரைவர் ஜமுனா" திரைப்படத்தின் வெளியீட்டு தேதி தற்காலிகமாக தள்ளி வைக்கப்படுகிறது.
தாமதத்திற்கு வருந்துகிறோம். அத்துடன் மிக விரைவில் திரைப்படத்தை உங்களின் பார்வைக்கு

டிரைவர் ஜமுனா ரிலீஸ் தேதி தள்ளிவைப்பு!
கொண்டு வர இருக்கிறோம். புதிய வெளியீட்டுத் தேதி விரைவில் அறிவிக்கப்படும். தங்களின் மேலான ஆதரவிற்கும், அன்பிற்கும் தலை வணங்குகிறோம்' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ABOUT THE AUTHOR

...view details