தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / entertainment

"நல்ல நண்பர்களை இழந்து விடாதீர்கள்; எனக்கு நண்பர்களே கிடையாது"- செல்வராகவன் வருத்தம் - நண்பர்கள் குறித்து செல்வராகவன்

நல்ல நண்பர்களை மட்டும் இழந்து விடாதீர்கள்; எனக்கு நண்பர்களே கிடையாது என இயக்குநர் செல்வராகவன் உருக்கத்துடன் கூறியுள்ளார்.

இயக்குநர் செல்வராகவன்
இயக்குநர் செல்வராகவன்

By

Published : Mar 1, 2023, 2:19 PM IST

சென்னை: தமிழ் திரையுலகில் இயக்குநர் செல்வராகவன் "ஜீனியஸ் இயக்குநர்" என ரசிகர்களால் போற்றப்படுபவர். அவரது இயக்கத்தில் வெளியான 'காதல் கொண்டேன்,' 'ஆயிரத்தில் ஒருவன்', '7ஜி ரெயின்போ காலனி', 'மயக்கம் என்ன', 'புதுப்பேட்டை' உள்ளிட்ட திரைப்படங்கள் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றன.

கடைசியாக தனுஷ் நடிப்பில் 'நானே வருவேன்' படத்தை கடந்தாண்டு இயக்கினார். இதையடுத்து, ஆயிரத்தில் ஒருவன் இரண்டாம் பாகத்தை இயக்க உள்ளதாக அறிவித்தார். எனினும் இதுதொடர்பாக எந்த தகவலும் வெளியாகவில்லை. இதற்கிடையே நடிப்பில் கவனம் செலுத்திய செல்வராகவன் விஜய் நடித்த 'பீஸ்ட்', 'சாணி காயிதம்', 'பகாசுரன்' ஆகிய படங்களில் நடித்தார்.

சுமாரான நடிப்பை கொடுத்திருந்தாலும் இவருக்கு ஏன் இந்த தேவையில்லாத வேலை என நெட்டிசன்கள் சிலர், சமூக வலைதளங்களில் கருத்துக்களை பதிவிட்டனர். சமீபகாலமாகவே டிவிட்டரில் ஏதாவது கருத்துக்களை பதிவிட்டு வருகிறார் செல்வராகவன். அந்த வகையில் டிவிட்டரில் பதிவிட்டுள்ள அவர், "அனுபவத்தில் சொல்கிறேன்.

நல்ல நண்பர்களை மட்டும் இழந்து விடாதீர்கள். எனக்கு நண்பர்களே கிடையாது. 23 வருடங்களாய் வேலையை தவிர எதையும் யோசித்ததில்லை. இன்று நண்பர்களுடன் ஆனந்தமாய் இருப்பவர்களை பார்த்தால் பொறாமையாய் உள்ளது. எங்கு போய் நட்பை தேடுவேன்" என கூறியுள்ளார். இதற்கு பதில் அளித்துள்ள நெட்டிசன்கள் சிலர், "உங்களுக்கு நண்பர்களாக நாங்கள் இருக்கிறோம்” என பதிவிட்டு வருகின்றனர்.

இதையும் படிங்க: நடிகை சமந்தாவுக்கு ரத்த காயம்.. அதிர்ச்சியில் ரசிகர்கள்..

ABOUT THE AUTHOR

...view details