சிவகார்த்திகேயன் நடித்து கடந்த வாரம் வெளியான படம் ”டான்”. இப்படம் தமிழ்நாட்டில் நல்ல வசூலைப் பெற்று வருகிறது. இந்நிலையில் டான் படம் ரிலீசாகி 5 நாள் ஆகிய நிலையில், டான் படத்தின் அமெரிக்கா வசூலை விநியோகம் செய்த நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
அமெரிக்காவிலும் வசூலைக் குவிக்கும் 'டான்'! - cinema news
சிவகார்த்திகேயன் நடித்துள்ள ’டான்’ திரைப்படம் அமெரிக்காவில் ரூ.2 கோடிக்கும் மேல் வசூலித்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவிலும் வசூலை குவிக்கும் ”டான்”!
அதன்படி டான் படம், 3 லட்சம் அமெரிக்க டாலர்களை வசூலித்து சாதனைப் படைத்துள்ளது. இந்திய மதிப்பில் 2.32 கோடி ரூபாய் வசூலித்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அமெரிக்காவில் டான் படம் 225 திரையரங்குகளில் வெளியிடப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க:'ரவுடி பேபியைக் காணோம்' - தனுஷின் யூ-ட்யூப் சேனல் முடக்கமா?