இயக்குநர் அட்லியிடம் உதவி இயக்குநராக இருந்த சிபி சக்கரவர்த்தி இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள திரைப்படம் தான் ‘டான்’. இப்படத்தில், இவருடன் பிரியங்கா மோகன், எஸ்ஜே. சூர்யா, சமுத்திரக்கனி, சிவாங்கி உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இத்திரைப்படம் கடந்த 13ஆம் தேதி வெளியானது.
கல்லூரி தொடர்பான கதை, தந்தை பாசம் எனப் பல தரப்பட்ட உணர்வுகளை கொண்ட இப்படம் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு பெற்று வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடி வருகிறது. இந்நிலையில், இப்படம் உலகம் முழுவதும் ரூ.100 கோடி வசூலித்துள்ளதாகப் படக்குழுவினரால் அறிவிக்கப்பட்டுள்ளது.