சென்னை தியாகராய நகரில் அமைந்துள்ள ஶ்ரீ ஷங்கர் லால் சுந்தர் பாய் ஷசுன் ஜெயின் மகளிர் கல்லூரியில் பத்ம விபூஷண் விருதுபெற்ற தொல்லியல் நிபுணர் பீபீ லால் குறித்த ஆவணப்படம் திரையிடப்பட்டது. இப்படம் ராஜஸ்தானில் நடைபெற்ற தேசியத் திரைப்படவிழாவில் பங்கேற்று சிறந்த ஆவணப்படமாகத் தேர்வு செய்யப் பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
கல்லூரியில் சமஸ்கிருதத்துறைப் பேராசிரியர் முனைவர் ரமா தேவி அவர்களின் எண்ணத்தில் உதயமாகிக் காட்சி ஊடகவியல் துறைப்பேராசிரியர் எபினேசர் அன்னாதாஸின் இயக்கத்தில், முனைவர் எபிராஜ் இசையில் உருவான ஆவணப்படம், பலராலும் பாராட்டப்பட்டது. விழாவிற்கு வருகை புரிந்தவர்களை கல்லூரி முதல்வர் முனைவர் சா.பத்மாவதி வரவேற்றார்.