தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / entertainment

சிறு பட்ஜெட் படங்களை எடுக்காதீர்கள் - தயாரிப்பாளர் சிவா - Entertainment

தமிழ் சினிமாவில் சிறு பட்ஜெட் படங்களை எடுக்காமல் இருப்பதே சிறந்தது என தயாரிப்பாளர் சிவா தெரிவித்துள்ளார்.

சிறு பட்ஜெட் படங்களை எடுக்காதீர்கள்.. தயாரிப்பாளர் சிவா
சிறு பட்ஜெட் படங்களை எடுக்காதீர்கள்.. தயாரிப்பாளர் சிவா

By

Published : Dec 14, 2022, 4:17 PM IST

மான்வேட்டை திரைப்படத்தின் இசை வெளியீட்டு நிகழ்ச்சியில் தயாரிப்பாளர் சிவா பேச்சு

சென்னை: இயக்குநர் திருமலை இயக்கியுள்ள ‘மான் வேட்டை’ படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று (டிச.14) சென்னையில் நடைபெற்றது. இதில் தயாரிப்பாளர் கே.ராஜன், அம்மா கிரியேஷன்ஸ் சிவா, இயக்குநர் பேரரசு, ரமேஷ் கண்ணா, தயாரிப்பாளர் ஜேஎஸ்கே.சதீஷ், ரவிமரியா, ஆர்கே சுரேஷ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்வில் அம்மா கிரியேஷன்ஸ் சிவா பேசுகையில், “இன்றைக்கு உள்ள வியாபாரச் சூழலில், சிறு பட்ஜெட் படங்களுக்கு எந்த வித எதிர்காலமும் இல்லாத இருட்டான சூழலில் நாம் இருக்கிறோம். எனவே, சிறு படங்கள் எடுப்பவர்கள் ஒரு முறைக்கு இரு முறை யோசித்து படம் எடுக்க வேண்டும்.

99 சதவீத சிறு பட்ஜெட் திரைப்படங்கள் தேங்கி நிற்கின்றன. எந்தவித வியாபாரத்துக்கும் வழியில்லாமல் இருக்கிறது. வியாபாரச் சூழலும் மாறிவிட்டது. வியாபார நோக்கத்தில் சிறு பட்ஜெட் படங்களை எடுக்காமல் இருப்பதே சிறந்தது” என்றார்.

இதனைத்தொடர்ந்து பேசிய ஆர்கே சுரேஷ், “தயாரிப்பாளர் சங்கம் வெற்றி பெற்று ஒரு வருடம் கரோனாவில் சென்று விட்டது. கடந்த ஒரு வருடமாகத்தான் பணிகள் நடைபெற்று வருகின்றன. விரைவில் தயாரிப்பாளர் சங்கத்திற்கு தேர்தல் அறிவித்து, ஜனநாயக அடிப்படையில் தேர்தல் நடத்தப்படும்” எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க:ஜான்வி கபூரின் லேட்டஸ்ட் ஹாட் கிளிக்ஸ்

ABOUT THE AUTHOR

...view details