மாமல்லபுரத்தில் திருமணம் முடிந்த கையோடு திருப்பதி சென்ற விக்னேஷ் சிவன் - நயன்தாரா தம்பதி , அங்கு சுவாமி தரிசனம் செய்து விட்டு வெளியே வளாகத்தில் போட்டோஷூட் நடத்தினர். அப்போது நயன்தாரா மற்றும் புகைப்படக்காரர்கள் கால்களில் செருப்பு அணிந்து இருந்தனர். இதற்கு பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்தனர்.
இதையடுத்து, விக்னேஷ் சிவன் திருப்பதி திருமலா தேவஸ்தானத்திற்கு மன்னிப்பு கடிதம் எழுதியுள்ளார். அதில் தங்களுடைய திருமணம் திருப்பதியில் நடக்க வேண்டும் என்று விரும்பியதாகவும், ஆனால் தவிர்க்க இயலாத காரணங்களால் சென்னையில் திருமணம் நடைபெற்றதாகவும் , இருப்பினும் திருமணம் முடிந்த கையோடு வீட்டுக்கு கூட செல்லாமல் நேரடியாக திருப்பதிக்கு வந்து ஏழுமலையானை தரிசனம் செய்ததாகவும் குறிப்பிட்டுள்ளார்.