தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / entertainment

அடியே தங்கமே.. நீதான் என் வெற்றி - நயன்தாராவை நினைத்து உருகிய விக்னேஷ் சிவன்! - நயன்தாரா

இயக்குநர் விக்னேஷ் சிவன் நயனுக்காக உருகி உருகி செய்துள்ள பதிவு தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

அடியே தங்கமே.. நீதான் என் வெற்றி - நயன்தாராவை நினைத்து உருகிய விக்னேஷ் சிவன்!
அடியே தங்கமே.. நீதான் என் வெற்றி - நயன்தாராவை நினைத்து உருகிய விக்னேஷ் சிவன்!

By

Published : Apr 29, 2022, 5:27 PM IST

விக்னேஷ் சிவன் இயக்கத்தில், விஜய்சேதுபதி, நயன்தாரா, சமந்தா நடிப்பில் உருவாகியுள்ள ’காத்துவாக்குல ரெண்டு காதல்’ திரைப்படம் நேற்று (ஏப்.28) வெளியாகியது. இப்படம் பல தரப்பட்டோரிடம் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.

இந்நிலையில், இந்தப் படத்தின் கமர்ஷியல் ஹிட் உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் தன் ’டார்லிங்’ நயன்தாராவுக்காக உருகி உருகி விக்னேஷ் சிவன் போட்டிருக்கும் இன்ஸ்டாகிராம் பதிவு தற்போது வைரலாகி வருகிறது.

அந்தப் பதிவில், 'அன்பு தங்கமே! இப்போது நீ என் கண்மணி! என் வாழ்க்கையில் வலிமையின் தூணாக இருந்து வருவதற்கு நன்றி. நீ எனக்கு முதுகில் தட்டிக் கொடுப்பதே ஒரு இனிமை. நீ எனக்காக இவ்வளவு அழகாய் இருக்கிறாய். ஒவ்வொரு முறையும் நான் என் வாழ்வில் தாழ்வாக உணரும்போதும நீ என்னுடன் இருந்து இருக்கிறாய். நீ என்னுடன் நின்ற விதம், என்னை முடிவுகள் எடுக்க வைத்தது மற்றும் நீ எவ்வளவு எனக்கு உறுதுணையாக இருந்தாய் என்பது எனக்கு நன்றாகத் தெரிகிறது.

என்னையும் என் படத்தையும் முழுமைப்படுத்தியது நீ தான். இந்தப் படத்தின் வெற்றி உனது வெற்றி. இன்று நீ திரையில் ஜொலிப்பதைக் காணவும், மீண்டும் உன்னை இயக்கி உன்னிடமிருந்து மிகச்சிறந்த நடிப்பை வெளிக்கொணர்ந்ததற்கும் ஒரு இயக்குநராக எனக்கு மிகுந்த மகிழ்ச்சியைத் தருகிறது.

அடியே தங்கமே.. நீதான் என் வெற்றி - நயன்தாராவை நினைத்து உருகிய விக்னேஷ் சிவன்!

உன்னுடைய புத்திசாலித்தனமான செயல் என் மனதை எப்போதுமே கவரும் அனுபவமாக இருக்கும். ஏற்கெனவே நாம் திட்டமிட்டபடி ஒரு நல்ல படத்தை உருவாக்கி, காதம்பரிக்கு இணையான நல்ல கதாபாத்திரத்தை உருவாக்கி இருக்கிறோம் என்ற திருப்தி எனக்கு இருக்கிறது. நீ கண்மணி கேரக்டரிலும் மகிழ்ச்சியாக இருப்பாய் என்று நம்புகிறேன்” என்று பதிவிட்டு அத்துடன் ஒரு வீடியோவும் வெளியிட்டுள்ளார்.

அடியே தங்கமே.. நீதான் என் வெற்றி - நயன்தாராவை நினைத்து உருகிய விக்னேஷ் சிவன்

இதையும் படிங்க: உயிருக்கு ஆபத்து: மறைந்த சின்னத்திரை நடிகை சித்ராவின் கணவர் புகார்

ABOUT THE AUTHOR

...view details