தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / entertainment

தளபதி 68 அப்டேட் எப்போது..? இயக்குநர் வெங்கட் பிரபுவின் சூசக தகவல்! - இயக்குனர் வெங்கட் பிரபு

சென்னையில் நடைபெற்ற 'ரெஜினா' (rejina) திரைப்பட இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழாவில் தளபதி-68 அப்டேட் கேட்டதற்கு இயக்குநர் வெங்கட் பிரபு சூசகமாக பதில் அளித்தார்.

Thalapathy 68
தளபதி-68 எப்போது

By

Published : Jun 6, 2023, 11:36 AM IST

சென்னை:தமிழ் சினிமா திரையுலகில் 'காதலில் விழுந்தேன்' என்ற திரைப்படத்தின்‌ மூலம் நாயகியாக அறிமுகமானவர் நடிகை சுனைனா. அதன் பின்னர் ஒரு சில நடிகர்களுடன் இணைந்து நடித்த பல படங்களில் கதை நாயகியாகவும் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. சமீபத்தில் விஜய் நடிப்பில் வெளியான 'தெறி' படத்திலும் ஒரு காட்சியில் நடித்திருந்தார். இந்நிலையில் தற்போது 'ரெஜினா' (rejina) என்ற த்ரில்லர் படத்தில் நடித்துள்ளார்.

இந்நிலையில் 'ரெஜினா' திரைப்படம் வரும்‌ 23 ஆம் தேதி திரைக்கு வரவுள்ளது. மேலும் இப்படத்தின் இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா சென்னை சத்யம் திரையரங்கில் நடைபெற்றது. இந்த விழாவின் முடிவில் ரெஜினா பட பாடலுக்கு நடினமாடி சுனைனா அசத்தினார்.

தொடர்ந்து, தயாரிப்பாளரும்‌ இசையமைப்பாளருமான சதீஷ் நாயர் மேடையில் பேசுகையில், "என்னுடைய காட்பாதர் கங்கை அமரன் தான். அவர் தான் என்னிடம் கூறுவார், நன்றாக இசையமைக்கிறாய், எதாச்சும் செய் என்று. மேலும் வெங்கட் பிரபுவை எனக்குக் கல்லூரியிலிருந்தே தெரியும். அவர்தான் இந்த படத்தின் முதல் தோற்றம், டிரெய்லர் எல்லாமே வெளியிட்டார்.

ஆகையால் இந்த படத்தில் வெங்கட் பிரபு ஆதரவு நிறைய இருக்கிறது. அவருடைய வழிகாட்டுதலில் தான் இத்திரைப்படம் உருவாகி உள்ளது. நான் இந்த படத்துக்கு இசை உருவாக்கினேன் (music creator). அதற்காக கங்கை அமரன் ஆதரவு பெரிதும் இருந்தது என்றார். மேலும் சூறாவளி என்ற பாடல் திரைத்துறைக்காக உருவாக்கியதில்லை. என் மகள் நிரஞ்சனா, எனது மடியில் உட்கார்ந்து கம்போசிங் (composing) செய்த பாடல் இது. படத்துக்காக உருவாக்கியதல்ல. அதன் பின் படத்தின் தேவைக்காக எடுத்துக் கொண்டோம்" என்றார்.

சிறப்பு விருந்தினரான இயக்குநர் வெங்கட் பிரபு மேடையில் பேசுகையில், "சதீஷ்க்கு இப்படி ஒரு music passion இருக்கு என்று தெரியவே இல்லை. எனக்கு ஆச்சர்யமாக இருந்தது. மேலும் என்‌ அப்பா இந்த நிகழ்வுக்கு வரமுடியவில்லை மிகவும் என்று வருத்தப்பட்டார். சுனைனா இப்படி ஒரு கதாபாத்திரம் நடிக்குமா? என்ற ஆச்சர்யம் இருத்தது‌. ஆனால் நன்றாக நடித்திருந்தார் என்றார்.

அதைத் தொடர்ந்து பேசிய அவர், தளபதி-68 அப்டேட் கூறினால் விஜய்யே என்னைத் திட்டுவார். அதனால் லியோ படம் வந்த பின் தளபதி-68 படத்தின் அப்டேட் வெளியாகும் என்று சூசனமாக தெரிவித்தார். தற்போது தளபதி - 68 குறித்த சில அப்டேட்கள் லீக் ஆகி இணையத்தில் வைரலாகி வரும் நிலையில், தற்போது வெங்கட் பிரபு கூறியது ரசிகர்களிடையே மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது என்றே கூறலாம்.

இதையும் படிங்க: ஜெயிலர், லியோ, விடாமுயற்சி, கங்குவா... ஜூனில் வரிசைகட்டும் பட அப்டேட்கள்...!

ABOUT THE AUTHOR

...view details