தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / entertainment

கவலையில் சிம்பு... நான்கு நாள்களாக மருத்துமனையில் டி.ராஜேந்தர்...

இயக்குநர் டி. ராஜேந்தருக்கு திடீர் உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

director-t-rajendar-hospitalized-in-chennai
director-t-rajendar-hospitalized-in-chennai

By

Published : May 23, 2022, 6:57 PM IST

Updated : May 23, 2022, 9:28 PM IST

சென்னை:இயக்குநரும் நடிகருமான டி. ராஜேந்தருக்கு திடீர் உடல்நலக் குறைவு ஏற்பட்டுள்ளது. இதனால் அவர் சென்னையில் உள்ள தனியார் மருத்துமனையில் நான்கு நாள்களாக சிகிச்சைப் பெற்றுவருகிறார்.

அங்கு அவரது உடல் நிலை மோசமாக உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்ததாகவும், இதனால் அவரது மகன் சிம்பு, மேல் சிகிச்சைக்காக ராஜேந்தரை சிங்கப்பூருக்கு அழைத்து செல்லவிருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

டி. ராஜேந்தர் நடிகர், பாடலாசிரியர், கலை இயக்குனர், தயாரிப்பு மேலாளர் மற்றும் பின்னணி பாடகர், இசையமைப்பாளர் என பன்முகத் திறமைகளைக் கொண்டவர். அதுமட்டுமல்லாமல், அடுக்குமொழி வசனங்களை சரளமாக, சாதாரணமாக பேசி வியப்பில் ஆழ்த்தக்கூடியவர்.

குறிப்பாக வாயில் பீட் போட்டு, மேஜையில் தாளம் தட்டுவதில் வல்லவர். இதற்காகவே இவருக்கென ஒரு ரசிகர் பட்டாளம் உள்ளது. இப்படிப்பட்ட சூழலில் அவரது உடல்நிலை சரியில்லாமல் போனது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க:வாத்தியார் ஒருத்தர் தான்.. உலகம் சுற்றும் வாலிபன் ரிட்டன்ஸ்!

Last Updated : May 23, 2022, 9:28 PM IST

ABOUT THE AUTHOR

...view details