சென்னை: தமிழ் சினிமாவில் இசையமைப்பாளாராகவும் நடிகராகவும் விளங்குபவர், விஜய் ஆண்டனி. இவர் நடிப்பில் வெளியான நான், பிச்சைக்காரன், கோடியில் ஒருவன் உள்ளிட்ட படங்கள் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பைப் பெற்றன. இவர் தற்போது பிச்சைக்காரன் 2 படத்தை இயக்கி நடித்து வருகிறார்.
இதன் படப்பிடிப்பு தற்போது மலேசியாவின் உள்ள லங்காவி தீவில் படமாக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் படப்பிடிப்பில் ஏற்பட்ட படகு விபத்தில் விஜய் ஆண்டனிக்கு விபத்து ஏற்பட்டது. 120 கி.மீ., வேகத்தில் பைக் போட் ஓட்டிய விஜய் ஆண்டனி முன்னால் இருந்த படகு மீது மோதி தண்ணீரில் விழுந்துள்ளார்.
விஜய் ஆண்டனி குறித்த வதந்திகளை நம்ப வேண்டாம்: இயக்குநர் சுசீந்திரன் அறிக்கை! மேலும் விஜய் ஆண்டனிக்கு நீச்சல் தெரியாமல் அதிக தண்ணீரைக் குடித்த நிலையில் மீட்கப்பட்டுள்ளார். அவரை மீட்ட படக்குழுவினர் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அவரது முகம் முற்றிலும் சேதமடைந்து, பற்கள் உடைந்து சுய நினைவின்றி மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்தார்.
இதனையடுத்து விஜய் ஆண்டனியின் உடல்நிலை குறித்து இயக்குநர் சுசீந்திரன் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், ’பிச்சைக்காரன் 2 படப்பிடிப்பில் ஏற்பட்ட விபத்தில் காயமடைந்து சிகிச்சை பெற்று வந்த விஜய் ஆண்டனி இருதினங்களுக்கு முன் சென்னை வந்தடைந்தார். மருத்துவர்கள் அவரை 2 வாரங்களுக்கு ஓய்வு எடுக்க வலியுறுத்தி உள்ளனர். மேலும் விரைவில் அவர் ரசிகர்கள் இடம் வீடியோ மூலம் பேசுவார். ரசிகர்கள் பயப்பட வேண்டாம். அதுமட்டுமின்றி விஜய் ஆண்டனி பற்றிய தவறாக வதந்திகளை நம்ப வேண்டாம்’ என்றும் கேட்டுக்கொண்டார்.
இதையும் படிங்க: எம்ஜிஆர் மட்டும் இல்லையென்றால் திமுக இருந்திருக்காது - சி.வி. சண்முகம் பரபரப்பு பேச்சு