"ரிலாக்ஸ்" திரைப்படத்தின் ஃபர்ஸ்ட்லுக் வெளியீட்டு விழா சென்னை வடபழனியில் உள்ள பிரசாத் லேப்பில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் பெப்சி தலைவர் ஆர்.கே.செல்வமணி, நல்லி குப்புசாமி, கவிஞர் காசிமுத்து மாணிக்கம், பாடலாசிரியர் பழனி பாரதி, இயக்குனர் ஆர்.சுந்தர்ராஜன் மற்றும் திரைப்படத்தில் பணியாற்றிய தொழில்நுட்ப கலைஞர்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.
நிகழ்வில் மேடையில் பேசிய ஆர்.கே.செல்வமணி, சங்கங்களிலே என் வாழ்க்கை சங்கமித்து போய்விட்டதாகவும், தற்போதைய காலகட்டத்தில் ஒரு திரைப்படத்தை இயக்கி அதை தயாரித்து வெளியிடுவது சிரமமாக உள்ளது.
4 தினங்களுக்கு முன்பு பெங்களூரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மத்திய இணை அமைச்சர் எல்.முருகனை சந்தித்து திரைப்படத்துறையில் இருக்ககூடிய சவால்களை கூறினேன்.
50000 கோடி லாபம் ஈட்டக்கூடிய ஒருத்துறையில் எந்தவித கட்டமைப்பும் இல்லாமல் உள்ளது. திரைப்படத்துறை மத்திய அரசால் அங்கீகரிக்கப்பட்ட துறையாக இருந்த போதிலும் உரிய அங்கீகாரம் கிடைக்கவில்லை என கூறியதாகவும், 2 வாரங்களில் கூட்டம் கூட்டி திரைப்படத்துறையில் இருக்ககூடிய பிரச்சனைகள் குறித்து கேட்டறிந்து விரைவில் தீர்வு காணப்படும் என அமைச்சர் எல்.முருகன் எனக்கு உறுதியளித்ததாகவும் கூறினார்.
இதையும் படிங்க: செல்போனில் வெளியிடப்பட்ட டீசர், வெளிநடப்பு செய்த தயாரிப்பாளர்... சர்ச்சைக்குள்ளான டீசர் வெளியீட்டு விழா