தமிழ்நாடு திரைப்பட இயக்குனர்கள் சங்கத்தின் 10 உறுப்பினர்கள் இயக்கத்தில் , FEFSIயில் அங்கம் வகிக்கும் ஒளிப்பதிவாளர்கள், இசையமைப்பாளர்கள், கலை ,நடன, சண்டைப் பயிற்சி இயக்குநர்கள், படத்தொகுப்பாளர்கள், தயாரிப்பு மேலாளர்கள் என அனைத்து சங்க திறமையான கலைஞர்கள் இணைந்து பணியாற்றும் 10 புதிய திரைப்படங்களுக்கான அறிவிப்பு விழா இன்று(ஏப்.20) சென்னை வடபழனி கமலா திரையரங்கில் நடைபெற்றது.
இந்த இயக்குநர்களால் தான் தமிழ் சினிமாவிற்கு கெட்ட பெயர் - சொல்கிறார் பேரரசு! - tamil movies
அனுபவம் இல்லாத இயக்குநர்களால் தான் தமிழ் சினிமாவிற்கு கெட்டபெயர் மற்றும் வீழ்ச்சி என இயக்குனர் பேரரசு குற்றம்சாட்டியுள்ளார்.
இவ்விழாவில் திரைத்துறையில் உள்ள அனைத்து சங்க நிர்வாகிகளும் கலந்துகொண்டனர். இவ்விழாவில் பேசிய இயக்குநரும் தமிழ்நாடு திரைப்பட இயக்குனர்கள் சங்க பொருளாளருமான பேரரசு பேசும்போது, “ஒருசில படங்கள் மட்டுமே பணிபுரிந்த உதவி இயக்குனராக இல்லாத குறும்படங்கள் இயக்கி இயக்குநரான இயக்குநர்களால்தான் தமிழ் சினிமாவிற்கு கெட்ட பெயர் மற்றும் வீழ்ச்சி, ஆனால் இங்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளவர்கள் அனுபவசாலிகள்” எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: கேஜிஎஃப் படம் பார்த்த இளைஞர் மீது துப்பாக்கிச் சூடு!