சென்னை:இயக்குநர் பா.ரஞ்சித் இயக்கியநட்சத்திரம் நகர்கிறது படத்திற்குப் பின் தற்போது நடிகர் விக்ரம் நடித்து வரும் படத்தை இயக்கி வருகிறார். இப்படத்தை ஞானவேல் ராஜாவின் ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் தயாரிக்கிறது. இப்படத்தில் விக்ரம், பசுபதி, மாளவிகா மோகனன், பார்வதி உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர். இது விக்ரமின் 61வது படம் என்பது குறிப்பிடத்தக்கது.
இப்படத்திற்கு ஜிவி.பிரகாஷ்குமார் இசை அமைக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு ஆந்திராவில் சமீபத்தில் தொடங்கியது. இயக்குநர் பா.ரஞ்சித் தனது வழக்கமான கதைக்களத்தில் இப்படத்தை இயக்கி வருகிறார்.