தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / entertainment

Margazhiyil Makkalisai 2022:இயக்குநர் பா.இரஞ்சித்தின் 'மார்கழியில் மக்களிசை 2022' நாளை ஆரம்பம் - Tomorrow starts at Chennai

Margazhiyil Makkalisai 2022: இயக்குநர் பா.இரஞ்சித் நடத்தும் 'மார்கழியில் மக்களிசை 2022' நாளை சென்னையில் ஆரம்பிக்க உள்ள நிலையில் அதற்கான முன்பதிவுகளுக்கான டவுன் ஸ்க்ரிப்ட் வலைதள லிங்க் வெளியிடப்பட்டுள்ளது.

Etv Bharat
Etv Bharat

By

Published : Dec 27, 2022, 6:11 PM IST

சென்னை: இயக்குநர் பா.இரஞ்சித்தின் நீலம் பண்பாட்டு மையம் கடந்த 2020-2021-ல் முன்னெடுத்த 'மார்கழியில் மக்களிசை' (Margazhiyil Makkalisai 2022) கலை நிகழ்ச்சி சென்னை, மதுரை, கோவையில் 500-க்கும் மேற்பட்ட கலைஞர்கள், 100-க்கும் மேற்பட்ட திரைப்பட பிரபலங்கள், அரசியல் தலைவர்கள், 15,000-க்கும் மேற்பட்ட பார்வையாளர்கள் என மிகப் பிரமாண்டமாக நடைபெற்று மக்களிடையே மிகப்பெரும் வரவேற்பைப் பெற்றது.

அந்த வகையில், இந்த 2022ஆம் ஆண்டிற்கான மார்கழியில் மக்களிசை நிகழ்ச்சி சென்னையில் வருகிற 28ஆம் தேதி சர்.முத்தா வெங்கடசுப்பா ராவ் கான்சர்ட் ஹாலில், பறையிசை மேளதாளங்களுடன் தொடங்க உள்ளது. நிகழ்ச்சியின் முதல் நாளான 28ஆம் தேதி நாட்டுப்புற மற்றும் பழங்குடியினர் பாடல்கள் மேடையில் அரங்கேற்றப்படுகின்றது.

இரண்டாவது நாளான 29ஆம் தேதி கறுப்பின மக்களின் புரட்சி வடிவமாக திகழும், ஹிப் ஹாப் இசையும் (Hip hop Music), சென்னையின் கருவூலமான கானாப் பாடல்களும் (Chennai Gana Songs) இடம்பெற உள்ளன. மேலும், நிகழ்ச்சியின் கடைசி நாளான 30ஆம் தேதி, நம் மக்களின் பழம்பெரும் கதையாடல்களான ஒப்பாரி பாடல்கள், விடுதலைக்கான எழுச்சிமிகு பாடல்கள் மேடையேற்றப்படுகின்றன. திரைப்பிரபலங்கள் மற்றும் அரசியல் சார்ந்த சமூக அமைப்பினர்கள் சிறப்பு அழைப்பாளர்களாக பங்கேற்று மக்களிசையை மக்களோடு கொண்டாடத் தயாராக இருக்கின்றனர்.

இந்த நிகழ்ச்சிகளைக் காண கட்டணம் இல்லை. மேலும், கீழே உள்ள டவுன் ஸ்க்ரிப்ட் என்ற வலைதள அமைப்பின் லிங்க்-யை கிளிக் செய்வதன் மூலம் "கட்டணமில்லா" முன்பதிவைப் பெறுவது மற்றும் நிகழ்ச்சிக்கான முழு விவரங்களையும் தெரிந்து கொள்ளலாம்.

நாள் 01 - நாட்டுப்புற பாடல்கள் & பழங்குடியினர் இசைகள் (டிச.28)

townscript.com/e/margazhiyil-…

நாள் 01- நாட்டுப்புற பாடல்கள் & பழங்குடியினர் இசைகள்

நாள் 02 - கானா & ஹிப்- ஹாப் (டிச.29)

townscript.com/e/margazhiyil-…

நாள் 02- கானா & ஹிப்- ஹாப்

நாள் 03 - ஒப்பாரி & விடுதலைப் பாடல்கள் (டிச.30)

townscript.com/e/margazhiyil-…

நாள் 03 - ஒப்பாரி & விடுதலை பாடல்கள்

இதையும் படிங்க: இயக்குநர் பா.ரஞ்சித் - விக்ரம் இணையும் படத்தின் தலைப்பு அறிவிப்பு!

ABOUT THE AUTHOR

...view details