தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / entertainment

படமாகும் சரவணபவன் அண்ணாச்சி வாழ்க்கை - இயக்குவது யார் தெரியுமா? - ஜெய் பீம் இயக்குநர்

தமிழ்நாட்டில் பரபரப்பாக பேசப்பட்ட சரவணபவன் மற்றும் ஜீவஜோதி வழக்கை இயக்குநர் ஞானவேல் திரைப்படமாக உருவாக்க உள்ளார்.

மீண்டும் உண்மை சம்பவத்தினை படமாக்கவுள்ள ’ஜெய் பீம்’ இயக்குநர்
மீண்டும் உண்மை சம்பவத்தினை படமாக்கவுள்ள ’ஜெய் பீம்’ இயக்குநர்

By

Published : Jul 26, 2022, 1:28 PM IST

உண்மை சம்பவத்தை அடிப்படையாக வைத்து ஞானவேல் இயக்கிய படம் ’ஜெய்பீம்’ இப்படம் அனைவரின் மத்தியிலும் மிகுந்த வரவேற்பைப் பெற்றது. ஆஸ்கர் வரை அனுப்பப்பட்டது. இந்நிலையில் இப்படத்தை இயக்கிய‌ ஞானவேல் மீண்டும் ஒரு உண்மைச் சம்பவத்தை அடிப்படையாக வைத்து அடுத்த படத்தை இயக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அதாவது தமிழ்நாட்டில் பரபரப்பாக பேசப்பட்ட சரவணபவன் ராஜகோபால் மற்றும் ஜீவஜோதி வழக்கு திரைப்படமாக எடுக்கிறாராம். அதுவும் இங்கில்லை இந்தியில். ராஜகோபால் மற்றும் ஜீவஜோதி வழக்கு 18 ஆண்டுகள் நடைபெற்றது. இறுதியில் கடந்த 2019ம் ஆண்டு ராஜகோபால் உயிரிழந்தார்.

தமிழ்நாட்டில் ’தோசை கிங்’ என்று அழைக்கப்பட்டவர் சரவண பவன் ராஜகோபால். தனது கடின உழைப்பால் சரவண பவன் உணவகத்தை உலக அளவில் கொண்டு சென்றார். ஆனால், மூடநம்பிக்கை அவரை படுகுழியில் தள்ளியது.

ஏற்கனவே இரண்டு மனைவியை கட்டிக்கொண்ட இவர் மூன்றாவது திருமணம் செய்துகொண்டால் இன்னும் பெரிய பணம் சேரும் என்று ஜோதிடர்கள் சொன்னதாக கூறப்படுகிறது. இதனால் ஜீவஜோதி எனும் பெண்ணை திருமணம் செய்ய முடிவெடுத்தார்.

ஆனால் ஜீவஜோதி இதற்கு சம்மதிக்கவில்லை. மேலும் பிரின்ஸ் சாந்தகுமார் என்பவரை ஜீவஜோதி திருமணம் செய்து கொண்டார். இதனால் ஆத்திரமடைந்த ராஜகோபால் ஜீவஜோதியின் கணவரை ஆள்‌வைத்து கடத்தி கொலை செய்ததாக வழக்கு பதியப்பட்டது.

இந்த வழக்கு பல ஆண்டுகள் நடைபெற்று வந்தது. இறுதியில் ராஜகோபால் உள்பட இவ்வழக்கில் தொடர்புடைய அனைவருக்கும் உயர்நீதி மன்றம் ஆயுள் தண்டனை வழங்கியது. இதனை எதிர்த்து ராஜகோபால் உச்சநீதிமன்றத்தை நாடினார். ஆனால், உயர்நீதி மன்றத்தின் தீர்ப்பை உறுதி செய்தது உச்சநீதிமன்றம். இதனால், ராஜகோபால் சிறை சென்றார்.

இறுதியாக, உடல்நலக்குறைவு ஏற்பட்டதால் ராஜகோபால் கடந்த 2019 ஆம் ஆண்டு உயிரிழந்தார். இந்த வழக்கினை தற்போது ”தோசை கிங்” என்ற பெயரில் ஞானவேல் இயக்க உள்ளார் என தகவல்கள் வெளியாகி வருகிறது. இதனை எதிர்த்து ஜீவஜோதி தரப்பு வழக்கு தொடர திட்டமிட்டு வருவதாக கூறப்படுகிறது.

இதையும் படிங்க:‘சினிமா மூலம் வெற்றி, தோல்விகளை எதிர்கொள்ள கற்றுக்கொண்டேன்’ - ஸ்ருதிஹாசன்

ABOUT THE AUTHOR

...view details