தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / entertainment

'கடைசி விவசாயி ரூ‌.30 கோடி கூட வசூலிக்க வில்லை' - மிஷ்கின் வேதனை! - Vellimalai Audio launch

ரூ.500, ரூ.400 கோடி வசூல் ஈட்டும் திரைப்படங்களுக்கு நடுவே, சர்வதேச அங்கீகாரம் பெற்ற "கடைசி விவசாயி" படம் ரூ.30 கோடி கூட வசூலிக்க வில்லை என இயக்குநர் மிஷ்கின் வேதனை தெரிவித்தார்.

Etv Bharat
Etv Bharat

By

Published : Jan 8, 2023, 11:09 PM IST

Updated : Jan 9, 2023, 4:39 PM IST

'கடைசி விவசாயி ரூ‌.30 கோடி கூட வசூலிக்க வில்லை' - மிஷ்கின் வேதனை!

ஓம்.விஜய் இயக்கத்தில் உருவாகி உள்ள “வெள்ளிமலை” படத்தின் இசை மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு விழா, சென்னை வடபழனியில் உள்ள கமலா திரையரங்கில் நடைபெற்றது. அதில் சிறப்பு விருந்திநர்களாக நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், இயக்குநர்கள் மிஷ்கின், பேரரசு, கே.எஸ்.ரவிக்குமார் மற்றும் திண்டுக்கல் ஐ.லியோனி கலந்து கொண்டு பேசினர்.

இயக்குநர் மிஷ்கின் மேடையில் பேசுகையில், 'இந்த படத்தை பார்க்கும் போது, எனது முதல் படம் பார்ப்பது போல் இருக்கிறது. மிகவும் எளிமையாக உள்ளது. படத்தின் இயக்குனரை மிகப் பிடித்திருந்தது. நீண்ட நாட்கள் கழித்து எனது அலுவலகத்திற்கு ஒரு இயக்குனர் வேட்டியுடன் வந்தார். நமக்கு இந்த வாழ்க்கையை எப்படி தீர்க்க வேண்டும் என்று தெரியவில்லை. காலையில் எழுந்தவுடன் பிரச்சனை தான், கனவில் பிரச்சனை தான். சந்தோஷமாக இருக்கும் ஒரே இடம் திரையரங்கு தான்.

இந்த படத்தின் டிரைலர் மற்றும் பாடல்கள் அனைத்தும் மிகவும் பிடித்திருந்தது. படத்தில் அனைத்துமே எளிமையாக உள்ளது. தனது கனவை இயக்குநர் மெய்ப்படுத்தியுள்ளார். இந்த மாதிரி படங்களை கண்டிப்பாக திரையரங்கில் தான் பார்க்க வேண்டும். இதை ஓடிடியில் பார்த்துக் கொள்ளலாம் என்பது ஒரு சோம்பேறித்தனம். அதை நான் ரவுடித்தனம் என்று தான் கூறுவேன். நல்ல படங்களை திரையரங்கில் தான் பார்க்க வேண்டும். அதிகம் செலவு செய்து விளம்பரம் செய்யக்கூடிய படங்களை மட்டுமே நாம் திரையரங்கில் போய் பார்த்துக் கொண்டிருக்கிறோம். அதை நோக்கியே நமது பயணமும் நகர்ந்து கொண்டிருக்கிறது.

இந்த படத்தில் இயற்கை வைத்தியத்தை பற்றி பேசி உள்ளனர். ஆனால் மருந்து நிறுவனங்கள் அனைத்தும் மிகப்பெரிய பிராடாகவே இயங்கி வருகிறது. 99 சதவீதம் மனிதர்களிடமிருந்து பார்மா கம்பெனிகள் சுரண்டி தான் வருகின்றனர். 1 சதவீதம் பேர் தான் நியாயமாக இருக்கிறார்கள்.

'கடைசி விவசாயி' படத்துக்கு சர்வதேச அளவில் அங்கீகாரம் கிடைத்துள்ளது. அந்த மாதிரி ஒரு படமாக தான் இது இருக்கும் என்று நான் நம்புகிறேன். கடைசி விவசாயி படத்தை மிகப்பெரிய வெற்றி படமாக்காதது எனக்கு கஷ்டமாக தான் இருக்கிறது. 400 கோடி, 500 கோடி என வருமானம் ஈட்டும் இந்த காலத்தில் கடைசி விவசாயி படத்துக்கு ஒரு ரூ. 30 கோடி கூட கிடைக்கவில்லை.
நிறைய மோசமான படங்களை திரையரங்கில் பார்க்கிறோம். இந்த படத்தை அனைவரும் திரையரங்கில் பார்க்க வேண்டும் என நான் ஆசைப்படுகிறேன்' என்றார்.

மேடையில் பேசிய சீமான், 'இந்த மாதிரி மண் சார்ந்த கதைகளை ஒரு இளைஞன் தயாரிப்பது மிகப்பெரிய வியப்புதான். தயாரிப்பாளர் ராஜகோபால் இளங்கோவனை பாராட்டியே ஆக வேண்டும். தென்மேற்கு பருவக்காற்று போன்ற படங்களின் மூலம் சிறந்த பாடல்களை தந்து வரும் இசையமைப்பாளர் ரகுநந்தனுக்கு வாழ்த்துக்கள்.

பல ஆண்டுகளாக உள்ள புற்று நோய்க்கு மருந்து இல்லை. எய்ட்ஸ் நோய்க்கு மருந்து இல்லை. கொரோனாவுக்கு மருந்து வந்துவிட்டது என்பதை எப்படி நம்புனீர்கள்? வியாபாரம். கொரோனாவுக்கு ஆங்கில மருத்துவத்தில் காப்பாற்றிய உயிர்களை விட, இயற்கை மருத்துவத்தில் பல உயிர்களை காப்பாற்ற முடிந்தது. மஞ்சள், வேப்ப மரத்தில் இல்லாத மருத்துவ குணங்கள் ஏதாவதில் இருக்கிறதா?

'வெள்ளிமலை' படத்தின் இசை மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு விழா

எடுத்தவுடனே இயேசுவை ஏற்றுக் கொண்டார்களா? எடுத்த உடனே புத்தரை ஏற்றுக் கொண்டார்களா? எடுத்த உடனே நபிகள் நாயகத்தை ஏற்றுக் கொண்டார்களா? எல்லாருமே நிராகரிக்கப்பட்டதுதான். அனைத்துமே தொடக்கத்தில் நிராகரிக்கப்பட்டதுதான். அது போல இந்த படத்தை நிராகரிக்க முடியாது.

தேள் கடித்த உடனே விஷம் ஏற ஆரம்பிக்கும் பதட்டப்படாமல், தண்ணீரில் தேள் கொட்டிய இடத்தை நனைத்தால் விஷம் ஏறாமல், தேள் கொத்திய இடுத்திற்கே விஷம் திரும்பும் என்றார் இது வேறு யாருக்கும் நடந்ததை கூறவில்லை எனக்கே நடந்துள்ளது என்றவர் நம்மிடம் இல்லாத மருத்துவமா?' என்றார்.

தமிழ் மொழி கூட மூத்த மொழி, அதற்காக அதை நிராகரித்து விடுவீர்களா? இயற்கை தாயை காப்பாற்ற வேண்டும். இயற்கை மருத்துவத்தை காப்பாற்ற வேண்டும். கடைசி விவசாயி சிறந்த படைப்பு. அது ஒரு படம் அல்ல. இப்போது இருக்கும் மனிதர்கள், மனிதர்களின் தொழிலை செய்து வருகிறார்கள். ஆனால், விவசாயிகள் கடவுளின் தொழிலை செய்து வருகிறார்கள்' என்றார்.

சக்தி ஃப்லிம் ஃபேக்டரி நிறுவனர் சக்திவேல் மேடையில் பேசுகையில், 'எளிய மக்களை முன்னிலைப்படுத்தி எடுக்கக்கூடிய திரைப்படங்கள் குறைந்து கொண்டே வருகின்றன. குடும்பம், குடும்பமாக திரையரங்குகளுக்கு வரும் படங்களும் குறைந்து கொண்டே இருக்கின்றன.

எப்போதெல்லாம் எளிய மனிதர்களை சார்ந்த படங்கள் திரையரங்குகளுக்கு வருகிறதோ, அப்போதெல்லாம் மிகப்பெரிய வெற்றி அடைகிறது. ஒரு எளிய மனிதனின் வாழ்க்கையை பிரதிபலிக்கிற ஒரு படம்தான் தற்போது உருவாகி உள்ளது‌. மாட்டுப் பொங்கல் அன்று முன்னோர்களுக்கும் நம்முடைய கடவுளுக்கும் வீட்டில் படையல் செய்வார்கள். கறி சமைத்து படையல் செய்வார்கள். சென்னை வந்ததற்கு பிறகு பொங்கல் அன்று கறி விற்கக்கூடாது என்று ஸ்டே ஆர்டர் வாங்கி உள்ளது தெரியவில்லை.

நான் என்ன சாப்பிட கூடாது என்பதை யாரோ ஒருவர் முடிவு செய்கிறார்கள். இந்த மண்ணின் தொன்மையையும், கலாச்சாரத்தையும் வெள்ளிமலை போன்ற படங்கள் மூலமாக தான் கொண்டு போய் சேர்க்க முடியும். பொங்கலுக்கு மிகப்பெரிய எதிர்பார்ப்புடன் 2 படங்கள் வெளியாகிறது. ஒவ்வொரு திரையரங்குகளிலும் வாரிசு, துணைவு படங்களுக்கு பெரிய புக்கிங் உள்ளது. 2 படங்களின் ரிப்போர்ட்டுமே நன்றாக இருந்தால், துணிவு வசூலை விட, வாரிசு படத்தின் வசூல் நன்றாகவே இருக்கும் என்று திரையரங்க உரிமையாளர்கள் கருத்து கூறுகின்றனர்.

ஏனெனில் குடும்பம் சார்ந்த மக்களை திரையரங்குக்கு அழைத்து வருவதற்கான விஷயம் எதில் இருக்கிறதோ, அது 2 மடங்கு வெற்றி பெறும் என்று திரையரங்க உரிமையாளர்கள் கூறுகின்றனர். குடும்பம், சாதாரண மக்கள், எளிய மக்கள் இவர்கள் எல்லோரும் திரையரங்கு வந்து, படம் பார்த்து வெற்றியடைய கூடிய படங்களையும் மண்ணுடைய தொன்மையையும் மக்களுடைய தொன்மையையும் உயர்த்திப் பிடிக்க வேண்டும்' என்றார்.

இதையும் படிங்க: இருள் ஆளும் 'டிமான்டி காலனி 2': வெளியான ஃபர்ஸ்ட் லுக்!

Last Updated : Jan 9, 2023, 4:39 PM IST

ABOUT THE AUTHOR

...view details