தமிழ்நாடு

tamil nadu

By

Published : Aug 8, 2023, 2:37 PM IST

ETV Bharat / entertainment

’உங்களது இரண்டு கண்களும் எனக்கு அவ்வளவு பிடிக்கும்’... பகத் பாசிலுக்கு மாரி செல்வராஜ் பிறந்தநாள் வாழ்த்து!!

இன்று 41வது பிறந்தநாளை கொண்டாடும் நடிகர் பகத் பாசிலுக்கு இயக்குநர் மாரி செல்வராஜ் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்

Etv Bharat
Etv Bharat

சென்னை: பூவே பூச்சூடவா, காதலுக்கு மரியாதை உள்ளிட்ட பல வெற்றி படங்களை இயக்கிய இயக்குநர் பாசிலின் மகன் பகத் பாசில். கையெத்தும் தூரத் என்ற படத்தின் மூலம் அறிமுகமான பகத் பாசிலுக்கு சினிமாவில் வெற்றி அவ்வளவு எளிதாக கிடைக்கவில்லை. அதனால் சிறிது காலம் இடைவெளிக்கு பிறகு கேரளா கஃபே என்ற படத்தில் நடித்தார். அந்த படம் மூலம் ரசிகர்கள் பார்வை இவர் பக்கம் திரும்பியது.

பின்னர் சப்பா குரேஷி, ’22 female koottayam' உள்ளிட்ட படங்களின் மூலம் தன்னால் குணச்சித்திர கதாபாத்திரங்களிலும் நடிக்க முடியும் என நிருபித்தார். பின்னர் அன்னையும் ரசூலும், நார்த் 24 கதம், மகேஷிண்டே ப்ரதிகாரம், பெங்களுரூ டேஸ் உள்ளிட்ட படங்களில் தனது வித்தியாசமான நடிப்பின் மூலம் ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தார்.

தொண்டிமுத்தாலும் த்ரிக்‌ஷாஷியும், கும்பலாங்கி நைட்ஸ், ஜோஜி, இருள் ஆகிய படங்களில் வில்லன் கதாபாத்திரத்தில் மிரட்டியிருந்தார். சினிமாத்துறையில் பகத் பாசிலின் வளர்ச்சிக்கு கரோனா காலகட்டத்தில் ஓடிடி வளர்ச்சியும் ஒரு முக்கிய காரணம் என கூறலாம். லாக்டவுன் காலகட்டத்தில் ஓடிடியில் வெளியான படங்கள் மலையாள சினிமாவையும் தாண்டி இந்திய அளவில் அவருக்கு மிகப்பெரும் ரசிகர் பட்டாளத்தை உருவாக்கியது.

சமீபத்தில் மாரி செல்வராஜ் இயக்கிய மாமன்னன் படத்தில் பகத் பாசில் நடித்த ரத்னவேலு என்ற வில்லன் கதாபாத்திரத்தை அனைவரும் கொண்டாடி தீர்த்தனர். ரத்னவேலு கதாபாத்திரத்திற்கு வெளியான எடிட் வீடியோவால் பல்வேறு சர்ச்சைகள் ஏற்பட்டாலும், இனி பகத் பாசில் வில்லனாக நடிக்கும் படங்களில் ஹீரோவை மிஞ்சி விடுவார் என ரசிகர்கள் சமூக வலைதளங்களில் புகழ்ந்து வருகின்றனர்.

இந்நிலையில் பிரபல நடிகர் பகத் பாசில் இன்று தனது 41வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். அவருக்கு அவரது மனைவியும், நடிகையுமான நஸ்ரியா, இயக்குநர் மாரி செல்வராஜ் ஆகியோர் பிறந்தநாள் வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளனர். இயக்குநர் மாரி செல்வராஜ் வெளியிட்டுள்ள பிறந்தநாள் வாழ்த்து குறிப்பில் “வணக்கம் பகத் சார்!!! உங்கள் இரண்டு கண்களும் எனக்கு அவ்வளவு பிடிக்கும். அந்த இரண்டு கண்களை வைத்துதான் என் ரத்தினவேல் கதாபாத்திரத்தை உருவாக்கினேன்.

ஒரு கண்ணில் பல தலைமுறைகளாக சொல்லிக் கொடுக்கப்பட்ட வாழ்க்கை முறை சரி என்ற நம்பிக்கையை தீர்க்கமாக வையுங்கள் என்றேன். மற்றொரு கண்ணில் புதிய தலைமுறைகள் முளைத்து வந்து கேட்கும் வாழ்வியல் முரணுக்கான ஆக்ரோஷ கேள்விகளையும் குழப்பங்களையும் வையுங்கள் என்றேன்.

மிகச் சரியாக இரண்டு கண்களிலும் இரண்டு நேரெதிர் வாழ்வை வைத்து என் படம் முழுக்க அப்படியே பயணித்தீர்கள். இறுதியாக இரண்டு கண்களையும் மூட சொன்னேன். ஏனென்று கேட்காமல் மூடினீர்கள். உங்கள் நெஞ்சுக்கூட்டுக்குள் டாக்டர்.அம்பேத்கரின் குரலை ஒங்கி ஒலிக்க விட்டேன். அவ்வளவுதான் உடல் சிலிர்த்து நீங்கள் ஓடிவந்து என்னை அணைத்துக் கொண்ட அந்த நொடி தீரா பரவசத்தோடு சொல்கிறேன்.

இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் பகத் சார்❤️❤️❤️ Fahadh Faasil" என கூறியுள்ளார்.

ABOUT THE AUTHOR

...view details