தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / entertainment

யோவ் எலான் மஸ்க்.., நீயாச்சும் என் படத்தை ரிலீஸ் பண்ணுயா..! - இன்ஸ்டாவில் புலம்பும் கார்த்திக் நரேன் - எலான் மஸ்க்

தனது சோஷியல் மீடியா பக்கங்களில் தொடர்ந்து சர்ச்சைக்குரிய கருத்துகளைப் பதிவிட்டு வரும் இயக்குநர் கார்த்திக் நரேன், இம்முறை ட்விட்டர் உரிமையாளர் இலான் மஸ்க்-கிற்கு தன் படத்தை ரிலீஸ் செய்யும்படி கோரிக்கை வைத்துள்ளார்.

’யோவ் எலான் மஸ்க்கு.., நீயாச்சும் என் படத்தை ரிலீஸ் பண்ணுயா..!’ - இன்ஸ்டாவில் புலம்பும் கார்த்திக் நரேன்
’யோவ் எலான் மஸ்க்கு.., நீயாச்சும் என் படத்தை ரிலீஸ் பண்ணுயா..!’ - இன்ஸ்டாவில் புலம்பும் கார்த்திக் நரேன்

By

Published : Apr 27, 2022, 7:01 PM IST

தமிழ் திரையுலகில் 2016இல் வெளியான ‘துருவங்கள் பதினாறு’ திரைப்படத்தின் மூலமாக இயக்குநராக அறிமுகமானவர் கார்த்திக் நரேன். தமிழ் திரையுலகில் மிக இளம் இயக்குநராக அறிமுகமான கார்த்திக் நரேன், திரையுலக வட்டாரங்களில் பெரும் பேச்சுப்பொருளானார். தன் இளம் வயதிலேயே இயக்கிய முதல் படமான ’துருவங்கள் பதினாறு’ திரைப்படத்தை மிக நேர்த்தியுடன் கார்த்திக் நரேன் கையாண்டிருந்தது அனைவரையும் வியப்படைய வைத்தது.

இதனையடுத்து, இவரின் அடுத்த திரைப்படத்தை சினிமா ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்தனர். இவர் இரண்டாவதாக இயக்கிய திரைப்படம் ‘நரகாசூரன்’. இந்தத் திரைப்படத்தை தயாரிக்க முன்வந்த இயக்குநர் கௌதம் மேனனுக்கும் இவருக்கும் சில கருத்து வேறுபாடுகள் வந்தன. மேலும் சில பொருளாதார பிரச்சினைகளால் அந்தப் படம் 5 வருடங்களாக ரிலீசாகாமல் உள்ளது.

இப்படத்தையடுத்து கார்த்திக் நரேன், ‘மாஃபியா’, ‘மாறன்’ ஆகிய இரண்டு ஃபிலாப் படங்களைக் கொடுத்தார். இதனால் ரசிகர்கள் இவர் மீது மிகுந்த அதிருப்தி கொண்டனர். இந்நிலையில், இன்ஸ்டாகிராம் போன்ற தனது சோஷியல் மீடியா பக்கங்களில் சர்ச்சைக் குறிய கருத்துக்களை பதிவிடுவதும் பின் அதை நீக்குவதும் கார்த்திக் நரேனின் வழக்கமாக இருந்து வருகிறது.

இந்நிலையில், இன்று அவரது இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்ட ஸ்டோரி ஒன்றில் “ யோவ் எலான் மஸ்க்.., நீயாச்சும் என் நரகாசுரன் படத்தை நீ மார்ஸ்க்கு போகுறதுக்குள்ள ரிலீஸ் பண்ணி விடுயா புண்ணியமா போகும்...!” என்று ட்விட்டர் உரிமையாளர் இலான் மஸ்க்-கிற்கு கோரிக்கை விடுத்துள்ளார். இவரின் இந்த இன்ஸ்டா ஸ்டோரி நெட்டிசன்களிடம் வைரலாகி வருகிறது.

இதையும் படிங்க: ஸ்டெர்லைட் ஆலைக்கெதிரான ஆவணப்படம்; இயக்குநருக்கு சம்மன் அனுப்பிய காவல் துறை!

ABOUT THE AUTHOR

...view details