ஆட்சிகள் மாறினாலும் சாதிக்கொடுமைகள் மாறவில்லை - இயக்குநர் பா.இரஞ்சித் வருத்தம் அறிமுக இயக்குநர் ஷான் இயக்கத்தில் யோகி பாபு நடிப்பில் நீலம் புரொடக்சன்ஸ் (Neelam Productions) தயாரித்துள்ள 'பொம்மை நாயகி' (Bommai Nayagi) படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழா இன்று (ஜன.29) சென்னையில் நடைபெற்றது. இதில் யோகி பாபு, பா.இரஞ்சித், மாரி செல்வராஜ், ஜி.எம்.குமார், அருள்தாஸ் உள்ளிட்ட படக்குழுவினர் பங்கேற்றனர்.
'நீலம்' பொறுப்புணர்ச்சியை தரும்:சிறப்பு விருந்தினராக பங்கேற்ற இயக்குநர் மாரி செல்வராஜ் மேடையில் பேசுகையில், 'கர்ணன் படப்பிடிப்பின்போது, இயக்குநர் ஷானை சந்தித்தேன். அப்போது இருந்து தற்போதுவரை ஷான் (Director Shan) பொறுமையாக இருக்கிறார். திரைக்கதை எழுதும்போதே தெரிந்துவிடும். நடிகர்களாக இருந்தால் மட்டும் போதாது. மனிதர்களாகவும் இருக்க வேண்டும். அவ்வாறு இப்படத்துக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். நீலம் தயாரிப்பில் ஒரு படத்தில் வேலை பார்த்தால், அடுத்து ஒரு கமர்ஷியல் படம் பண்ண தோன்றாது. ஒரு பொறுப்பு வந்துவிடும். வாழைப் படத்துக்கு நல்ல அணி கிடைத்துள்ளது. இந்தப் படம் என் மனதை அழுத்திக்கொண்டே இருந்தது.
நீலம் புரொடக்சன்ஸ் (Neelam Productions) தயாரித்துள்ள 'பொம்மை நாயகி' (Bommai Nayagi) படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழா நீலம் தயாரிப்பில் முதல் படத்தை இயக்கி உள்ளேன். அதனால், பிற்போக்குத்தனமான தவறான படத்தை எடுக்க மாட்டேன். அதை ஏற்படுத்திக் கொடுத்த நீலம் தயாரிப்புக்கு நன்றி. ஒரு நிஜத்தை நாம் எழுத யோசிக்கிறோம். ஆனால், இப்போது நீலம் இருக்கிறது. குண்டு, பொம்மை நாயகி போன்ற படங்கள் சாத்தியப்படுமா? என்பவற்றிற்கு ஆதரவு தரும் நீலம் தயாரிப்புக்கு நன்றி. அனைத்து இயக்குநர்களுக்குமே யோகி பாபுவுக்கு கதை இருக்கும். அதுபோல, எனக்கும் ஒரு ஆசை இருக்கிறது; அது சத்தியமாக நிறைவேறும்’ என்று தெரிவித்தார்.
அப்பாக்களின் வலியை உணர்ந்தேன்: நடிகர் யோகி பாபு மேடையில் பேசுகையில், 'மிக சந்தோசமாக இருக்கிறது. இதில் காமெடி செய்ய ஷான் விடவில்லை. கதை அந்தமாதிரி. நீண்ட நாள் கழித்து நீலம் தயாரிப்பில் நடிக்க உதவிய மாரி செல்வராஜுக்கு நன்றி. இந்தப் படம் முழுக்க Emotional ஆக நடிக்க வேண்டியது. அது நடிகரின் கையில் இல்லை. இயக்குநரின் கையில் உள்ளது. பொம்மை நாயகி படத்தின் மூலம் அப்பாக்களின் வலியை உணர்ந்து கொண்டேன்.
அனைத்தும் ரியலாக எடுக்கப்பட்டுள்ளது. நான் எந்த சினிமா போனாலும் நான் எப்போதும் காமெடியன் தான். வித்தியாசமான எந்த கதை இருந்தாலும் நான் நடிப்பேன். வாருங்கள் படம் பண்ணலாம். ஆனாலும், நான் காமெடியன் தான்' என்றார்.
இப்படத்தின் தயாரிப்பாளர் பா.இரஞ்சித் மேடையில் பேசுகையில், ’பொம்மை நாயகி இயக்குநர் ஷான் இவ்வளவு பேசுவதை முதல் முறை பார்க்கிறேன். அவருடைய நிதானம் இப்போதுதான் புரிந்தது. 'சினிமா' என்பது ஒரு பயங்கரமான கலை. பரியேறும் பெருமாளில் யோகி பாபு நடித்தது பிடித்திருந்தது. அப்போது, இந்த கதையில் யோகி பாபு செய்தால் நன்றாக இருக்கும் என தோன்றியது. இந்தக் கதை எனக்கு ரொம்ப பிடித்திருந்தது. இப்படி ஒரு Sensitiveஆன கதையை உருவாக்கும்போது, நியாயமாக மக்களிடம் கூற வேண்டும் என நினைத்தேன். வணிகம் என்றால் இந்தப் படத்துக்கு யோகி பாபு தான். அவர் வந்த பின்புதான் இது விரிவடைந்தது.
ஓடிடிக்கள் சிறிய படங்களுக்கு யோசிப்பது ஏன்?:நீலம் தயாரிப்பில் ஒரு படம் செய்கிறோம் என்றால் எனக்கு சமூக பொறுப்புகள் உள்ளது. சிறிய படங்களை விற்பது சாதாரண விஷயம் கிடையாது. மேலும், ஓடிடியில் விற்கவே முடியாது. அவர்கள் வாங்கும் படங்கள் பெரிய நடிகர்களுடையதே. சிறிய படங்கள் வெளியீட்டில் நிறைய பிரச்னைகள் உள்ளன. அதுவும் ஓடிடியை தொடர்பு கொள்ளவே முடியாது. திரையரங்கம் தான் ஜனநாயகமான மீடியம் என நினைக்கிறேன். ஆனால், ஓடிடியை நெருங்குவது கடினம்.
சிறிய படங்களுக்கு மிகப்பெரிய சிக்கல் இருக்கிற சூழலில்தான், பொம்மை நாயகி போன்ற படங்களை பெரும் நம்பிக்கையில் எடுக்கிறோம். இந்தப் படத்தை தயாரித்தது மன நிறைவாக இருக்கிறது என்பதை பெருமையாக கூறுகிறேன். இந்த படத்தில் அனைவரின் நடிப்பும் பேசப்படும். யோகி பாபு நடிப்பில் வேறொரு பரிமாணத்தை பார்க்கலாம். இந்தப் படம் உங்களை சரியான பாதையில் வழிநடத்தும் என நம்புகிறேன்’ என்றார்.
நீலம் புரொடக்சன்ஸ் (Neelam Productions) தயாரித்துள்ள 'பொம்மை நாயகி' (Bommai Nayagi) படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழா இதனைத்தொடர்ந்து பின் செய்தியாளர்களிடம் பேசிய பா.இரஞ்சித், 'பொம்மை நாயகி நிச்சயம் தமிழ் சினிமாவிற்கு நல்ல வரவாக இருக்கும். தற்போது வரை 'தங்கலான்' படத்தின் பணிகள் நடைபெற்று வருகின்றன. கமல் கூட இணைவது குறித்து பின்னர் அறிவிக்கிறேன். இரண்டு மாதிரியான கதைகள் உள்ளன. என்னை ஏற்றுக்கொண்டவர்கள் அதையும் ஏற்றுக்கொள்ள வேண்டும். நான் மாட்டுக்கறி நல்லா சாப்பிடுவேன். ஜெயித்துக்கொண்டுதான் இருக்கிறேன்.
ஆட்சிகள் மாறினாலும் காட்சி மட்டுமே நிரந்தரம்:ஆட்சிகள் மாறினாலும் தமிழ்நாட்டில் தீண்டாமை (Untouchability), சாதிக் கொடுமைகள் (Caste Discrimination) மாறாது என்பதற்கு வேங்கை வயல் (Eraiyur vengai vayal issue) சம்பவம் உதாரணமாக உள்ளது. சமூக நீதியில் அக்கறை கொண்டுள்ளதாக சொல்லும் திமுக அரசு இதுகுறித்து விரைவில் அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும். திமுக அரசு பொறுப்பேற்ற பிறகு சாதிப் பிரச்னைகள் குறையவில்லை. இந்தப் பிரச்னைகள் மீது தீவிர கவனம் செலுத்த வேண்டிய பொறுப்பு தமிழ்நாடு அரசுக்கு உள்ளது' என்று தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: வெளியானது "தக்ஸ்" படத்தின் டிரெய்லர்