தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / entertainment

இயக்குனரும், குணச்சித்திர நடிகருமான ஜி.எம்.குமார் மருத்துவமனையில் அனுமதி! - Kanni rasi

இயக்குனரும், சிறந்த குணச்சித்திர நடிகருமான ஜி.எம்.குமார் உடல்நலக்குறைவு காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இயக்குனரும் சிறந்த குணச்சித்திர நடிகருமான ஜி.எம்.குமார் மருத்துவமனையில் அனுமதி!
இயக்குனரும் சிறந்த குணச்சித்திர நடிகருமான ஜி.எம்.குமார் மருத்துவமனையில் அனுமதி!

By

Published : Jul 28, 2022, 1:33 PM IST

சென்னை: 1986 ஆம் ஆண்டு பிரபு, பல்லவி நடிப்பில் வெளியான ‘அறுவடை நாள்’ படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர், ஜி.எம்.குமார். இதன்பிறகு, பிக் பாக்கெட், இரும்புப்பூக்கள் மற்றும் உருவம் ஆகிய படங்களை இயக்கியுள்ளார்.

இயக்குனரும் நடிகருமான பாண்டியராஜன் முதன் முதலில் இயக்கிய ‘கன்னிராசி’படத்தின் திரைக்கதையை ஜி.எம்.குமார் எழுதியுள்ளார். மேலும் பிரபுவின் மை டியர் மார்த்தாண்டன் படத்தின் கதையையும், கமலின் நடிப்பில் வெளியான காக்கி சட்டை படத்தின் எழுத்தாளராகவும் பணியாற்றியுள்ளார்.

இயக்குனரும் சிறந்த குணச்சித்திர நடிகருமான ஜி.எம்.குமார் மருத்துவமனையில் அனுமதி!

இருப்பினும் இவரது நடிப்புத்திறமை பலராலும் பாராட்டப்பட்டது. குறிப்பாக, வெயில், மாயாண்டி குடும்பத்தார், அவன் இவன், தாரை தப்பட்டை போன்ற படங்களில் இவரது நடிப்பு மிகவும் ரசிக்கப்பட்டது.

இந்நிலையில், ஜி.எம்.குமார் உடல்நலக்குறைவு காரணமாக சென்னை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தொடர்ந்து அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதையும் படிங்க:பிரதாப் போத்தன் என்னும் வித்தியாச கலைஞன்!

ABOUT THE AUTHOR

...view details