தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / entertainment

இயக்குனர் ஏ.எல்.விஜயின் தாயார் வள்ளியம்மை காலமானார்! - ஏ எல் விஜய்

இயக்குநர் ஏ.எல்.விஜயின் தாயாரும் தயாரிப்பாளர் ஏ.எல்.அழகப்பனின் மனைவியுமான வள்ளியம்மை இன்று(ஜூலை 17) காலமானார்.

இயக்குனர் ஏ.எல்.விஜயின் தாயார் வள்ளியம்மை காலமானார்!
இயக்குனர் ஏ.எல்.விஜயின் தாயார் வள்ளியம்மை காலமானார்!

By

Published : Jul 17, 2022, 3:58 PM IST

திரைப்பட தயாரிப்பாளர் ஏ.எல். அழகப்பனின் மனைவியும், இயக்குநர் ஏ.எல். விஜய், நடிகர் ஏ.எல். உதயாவின் தாயாருமான ஏ.எல். வள்ளியம்மை இன்று(ஜூலை 17) காலை இயற்கை எய்தினார்.
2007ஆம் ஆண்டு அஜித், த்ரிஷா நடிப்பில் வெளிவந்த 'கிரீடம்' படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் ஏ.எல்.விஜய். இவர் தயாரிப்பாளர் ஏ.எல்.அழகப்பனின் மகனாவார். நடிகர் ஏ.எல்.உதயா இவரது சகோதரர்.

இவர் ’தெய்வத்திருமகள்’, ’மதராசபட்டினம்’, ’தலைவா’, ’தாண்டவம்’ உள்ளிட்டப் படங்களை இயக்கியுள்ளார். இந்நிலையில் இவரது தாயார் வள்ளியம்மை இன்று(ஜூலை 17) காலமானார். அவரின் மறைவுக்கு திரைத்துறையினர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

இதையும் படிங்க: அமீர்கான் படத்தை தமிழில் வெளியிடும் ரெட் ஜெயன்ட் மூவிஸ்!

ABOUT THE AUTHOR

...view details