சென்னை: ரா.வெங்கட் இயக்கத்தில் மறைந்த நடிகர் பூ ராமு மற்றும் காளி வெங்கட் நடித்து தீபாவளியை ஒட்டி வெளியான திரைப்படம், கிடா. இந்த படம் குறித்து பிரபல சினிமா பின் தொடர்பாளர் பேஸ்புக்கில் படத்தின் விமர்சனத்தை பதிவிட்டு உள்ளார். இதனை மறுபதிவாக பதிவிட்ட இயக்குநர் ரா.வென்கட், “இந்த படத்திற்கான புரோமோஷனே. இந்த மாதிரியான ரிவியூ தான். மகிழ்ச்சி. பெரிய மூன்று படங்களுக்கு நடுவே. எங்களின் கிடா களத்தில் நிற்பதே ஆச்சரியம். நண்பர்கள் முடிந்த அளவு தியேட்டரில் சென்று பாருங்கள். எல்லா ஊரிலும் படம் ரிலீஸ் ஆகல. இருந்தாலும் நம்பிக்கை இருக்கிறது எல்லாரிடமும் போய் சேரும்" என்று பதிவிட்டுள்ளார்.
இதனைத் தொடர்ந்து படத்தின் இயக்குநர் நேற்று பேஸ்புக்கில் மீண்டும், ‘இன்று காலை என் நண்பர்கள் இருவர் கிடா படம் பார்க்க காசி டாக்கீஸ் போயிருக்கிறார்கள். கூடவே ஒரு எட்டு பேரும் கிடா எடுக்க வந்திருக்கிறார்கள் ஆனால் தியேட்டர் நிர்வாகம் பதினைந்து பேர் இருந்தால் தான் படம் போடுவோம் என்றிருக்கிறார்கள்.