தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / entertainment

நான் தான் சூப்பர் ஸ்டார் என்று விஜய் எப்போதாவது சொன்னாரா? இயக்குநர் பேரரசு கேள்வி! - tamil cinema news

'சூப்பர் ஸ்டார் நான் தான் என்று விஜய் எப்போதாவது, எங்கேயாவது சொன்னாரா? யாராவது சொல்லிவிட்டு போய்டுவாங்க அல்லது ரசிகர்கள் சொல்லுவாங்க. இதையெல்லாம் பெரிய விஷயமாக எடுத்துக் கொள்ளக் கூடாது' என இயக்குநர் பேரரசு தெரிவித்துள்ளார்.

Etv Bharat
Etv Bharat

By

Published : Aug 3, 2023, 3:42 PM IST

சென்னை:யோகி வீர் பிக்சர்ஸ் தயாரிப்பில் பி.ராம் வழங்கும் எம்.ஜே.இளன் இயக்கத்தில் உருவாகும் 'துடிக்கிறது மீசை' படத்தின் தொடக்க விழா இன்று நடைபெற்றது. விழாவில் இப்படத்தில் நடிக்கும் குக் வித் கோமாளி புகழ், முருகதாஸ், இசையமைப்பாளர் ஸ்ரீகாந்த் தேவா உள்ளிட்ட படக்குழுவினரும், சிறப்பு விருந்தினர்களாகத் தயாரிப்பாளர் நடிகர் கே.ராஜன், நடிகர் செந்தில், இயக்குநர் பேரரசு, மது. தியாகராஜன் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சிக்குப் பின் செய்தியாளர்களிடம் பேசிய இயக்குநர் பேரரசு, “இப்போது சில படங்கள் வந்து ரொம்ப பிரச்னையாக போய்க்கிட்டு இருக்கு. அதனால் காமெடி படம் தான் தேவை. அதனால் மக்களுக்கு ரிலாக்சேஷன் தான் தேவை. ஒரு பக்கம் சாதி பிரச்னை. இன்னொரு பக்கம் நடிகர்களின் பட்டம் பிரச்சினை. அவங்க சும்மா இருந்தாலும் நம்ம ஆளுங்க கொம்பு சீவி விட்டு வேடிக்கை பார்க்குறாங்க'' எனக் கூறினார்.

யார் கொம்பு சீவி விடுகிறார்கள் என்ற கேள்விக்கு, ''ஜெயிலர் படம் வந்தது. அதைப் பற்றி மட்டும் பேச வேண்டும். ஆனால், விஜய் ரசிகர்களுக்கும் ரஜினி ரசிகர்களுக்கும் ஒரு போட்டியை உருவாக்கிவிட்டீர்கள். சூப்பர் ஸ்டார் நான் தான் என்று விஜய் எப்போதாவது, எங்கேயாவது சொன்னாரா? யாராவது சொல்லிவிட்டு போய்டுவாங்க அல்லது ரசிகர்கள் சொல்லுவாங்க. இதையெல்லாம் பெரிய விஷயமாக எடுத்து கொள்ளக் கூடாது. ரஜினிக்கு 168வது படம் ஜெயிலர் என்று நினைக்கிறேன். சூப்பர் ஸ்டார் பட்டம் கூட ரஜினி கேட்டு வாங்கியதல்ல.

சிலருக்கு அது தானாக அமையும். தாணு கொடுத்தார். மக்களும் அதை ஏற்றுக் கொண்டார்கள். 40 வருடமாக சூப்பர் ஸ்டார்... சூப்பர் ஸ்டார் என்று சொல்லி விட்டு, இன்றைக்கு போய் அடுத்த சூப்பர் ஸ்டார் என்றால்??? தளபதி என்றால் விஜய். சூப்பர் ஸ்டார் என்றால் ரஜினிகாந்த். இதில் அவர்கள் ஏதாவது சொல்கிறார்களா? கொம்பு சீவுவது நாம் தான். இது விஜய், ரஜினி இரண்டு பேருக்கும் மன உளைச்சலாக இருக்கும். சில விஷயங்களை நாம் கடந்து போய் விட வேண்டும்.

சூப்பர் ஸ்டார் என்பது ஒரு பட்டம். அதில் நம்பர் ஒன் யார் என்று கூட கேட்கலாம். யார் அதிகமாக சம்பளம் வாங்குகிறார்கள். தெலுங்கில் சூப்பர் ஸ்டார் யார்? ரஜினி இங்கு பீக்கில் இருந்தபோது தெலுங்கில் இருந்தவர் சிரஞ்சீவி. ஆனால், அவருக்கு சூப்பர் ஸ்டார் அல்ல சுப்ரீம் ஸ்டார். அப்போது சூப்பர் ஸ்டாராக இருந்தவர் கிருஷ்ணா. சூப்பர் ஸ்டார் பட்டத்துக்கும் அதற்கும் சம்பந்தமில்லை. அது ஒரு பட்டம் அவ்வளவு தான்.

துடிக்கிறது மீசை

தெலுங்கில் மகேஷ் பாபு தான் சூப்பர் ஸ்டாரா? அவரை விட அதிகமாக சம்பளம் வாங்கும் நடிகர்கள் உள்ளார்கள். அது ஒவ்வொரு மாநிலத்திற்கும் மாறுபடும். இது மக்களாக பார்த்து கொடுத்தது.‌ பட்டத்தைப் பட்டமாக பாருங்கள்.
விஜய் நான் தான் சூப்பர் ஸ்டார் என்று எங்கேயும் சொல்லவில்லை. ரஜினிகாந்தை மக்கள் சூப்பர் ஸ்டாராக ஏற்றுக் கொண்டதால் பெருந்தன்மையோடு அவரும் ஏற்றுக் கொண்டார்.

அடுத்த உலக நாயகன், அடுத்த நடிகவேள் திலகம், புரட்சி தலைவர் என்று யாரும் சொல்லவில்லை. சூப்பர் ஸ்டார் என்பதும் அது மாதிரி ஒரு பட்டம் தானே. இந்திய சூப்பர் ஸ்டார் என்றால் வடக்கில் அமிதாப் பச்சன். அவர் தான் அதிக சம்பளம் வாங்குகிறாரா? அவருக்கு மேல் ஏகப்பட்ட பேர் இருக்கிறார்கள். இது என்ன வாரிசு பிரச்னையா?

அரசியலில் தான் வாரிசு என்றால் சினிமாவிலும் ஏன் பட்டத்தை வைத்து வாரிசு என்கிறீர்கள். பட்டத்தை பட்டமாக பாருங்கள். ஒரு மனிதர் 40 வருடமாக இருக்கிறார் என்ற பொறாமையாக கூட இருக்கலாம். நான் யாருக்கும் எதிராகப் பேசவில்லை. மக்கள் திலகம் என்றால் எம்ஜிஆர் மட்டும் தான். அடுத்த மக்கள் திலகம் ரஜினி என்று சொல்ல வேண்டியது தானே? ஏன் இப்போது மட்டும் அடுத்த சூப்பர் ஸ்டார் விஜய் என்று சொல்கிறீர்கள் என்று கேள்வி எழுப்பினார்.

சிவகாசி நடிகர் விஜய்க்கு 46வது படம். எத்தனை நாளுக்கு நாள் இளைய தளபதியாக இருப்பார் என்று விஜய்யிடம் இந்தப் படத்தில் புரட்சி தளபதியாக வைக்கலாமா என்று கேட்டதற்கு, அப்பாவிடம் கேளுங்கள் என்று சொன்னார். அப்போது தளபதி ஸ்டாலின் துணை முதலமைச்சராக இருந்தார். 'தளபதி' என்றால் அப்போது வேறு மாதிரி இருக்கும். முதலமைச்சர் ஸ்டாலின் தலைவரான பிறகு தான் விஜய் தளபதி பட்டத்தை ஏற்றுக்கொண்டார்'' என்றும் கூறினார்.

இதையும் படிங்க:திரைப்படமாகும் இசைஞானியின் வாழ்க்கை வரலாறு - ஹீரோ யார் தெரியுமா?

ABOUT THE AUTHOR

...view details