தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / entertainment

'டைரி' திரைப்பட வெற்றியை கேக் வெட்டி கொண்டாடிய படக்குழு! - டைரி திரைப்படம்

நடிகர் அருள்நிதி நடிப்பில் சமீபத்தில் வெளியான ‘டைரி’ திரைப்படத்தின் வெற்றியைக் கொண்டாடும் வகையில் அப்படக்குழுவினர் கேக் வெட்டிக் கொண்டாடினர்.

’டைரி’ திரைப்பட வெற்றியை கேக் வெட்டி கொண்டாடிய படக்குழு!
’டைரி’ திரைப்பட வெற்றியை கேக் வெட்டி கொண்டாடிய படக்குழு!

By

Published : Sep 2, 2022, 3:43 PM IST

நடிகர் அருள்நிதி நடிப்பில் சமீபத்தில் அடுத்தடுத்து வெளியான 'டி பிளாக்', 'தேஜாவு' படங்கள் நல்ல வரவேற்பைப் பெற்று வெற்றியடைந்த நிலையில், அவரது நடிப்பில் கடந்த வாரம் “டைரி” என்ற படம் வெளியானது. இப்படத்தை Five Star Creations சார்பில் S. கதிரேசன் தயாரிப்பில் இன்னாசி பாண்டியன் இயக்கியுள்ளார்.

'டைரி' திரைப்படத்தில் அருள்நிதி மற்றும் பவித்ரா மாரிமுத்து ஆகியோர் முதன்மைக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஜெயபிரகாஷ், ஷிவா ஷஹ்ரா, சாம்ஸ், 'நக்கலைட்ஸ்' தனம் உள்ளிட்டோர் இணைந்து நடித்துள்ளனர். த்ரில்லர் வகைப் படமான இது வெளியாகி ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பைப் பெற்றது.

'டைரி' திரைப்பட வெற்றியை கேக் வெட்டி கொண்டாடிய படக்குழு!

அருள்நிதியின் வழக்கமான ஜானர் படமான இது மற்றுமொரு வெற்றிப் படமாக அமைந்தது. இந்நிலையில், இப்படத்தின் வெற்றியை படக்குழுவினர் உடன் நடிகர் அருள்நிதி கேக் வெட்டி கொண்டாடியுள்ளார்.

இதையும் படிங்க: சைக்கலாஜிகல் ஃபேண்டஸி திரில்லர் பெண்டுலம் படப்பிடிப்பு தொடக்கம்

ABOUT THE AUTHOR

...view details