தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / entertainment

துருவா சர்ஜா நடிக்கும் பான் இந்தியா படம் ’கேடி’ - Dhruva sarja

கன்னட நடிகர் துருவா சர்ஜா உருவாகியுள்ள ‘கேடி’ திரைப்படத்தின் டைட்டில் மற்றும் டீசர் அப்படக்குழுவினரால் வெளியிடப்பட்டது.

துருவா சர்ஜா நடிக்கும் பான் இந்தியா படம் ’கேடி’...!
துருவா சர்ஜா நடிக்கும் பான் இந்தியா படம் ’கேடி’...!

By

Published : Oct 22, 2022, 9:04 AM IST

தென்னிந்தியாவின் முன்னணி தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான KVN Productions, தங்களது அடுத்த படைப்பான 'KD- The Devil' படத்தின் டைட்டில் மற்றும் டீசரை பெங்களூருவில் பிரமாண்டமாக வெளியிட்டது. பெங்களூரு ஓரியன் மாலில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் பாலிவுட் மற்றும் கன்னட திரையுலகைச் சேர்ந்த பிரபலங்கள் கலந்து கொண்டனர்.

இவ்விழாவில் இயக்குநர் பிரேம் பேசுகையில், "எங்கே நல்லது இருக்கிறதோ, அங்கே கெட்டதும் இருக்கும். உதாரணத்திற்கு, ராமன் இருந்தபோது, ராவணனும் இருந்தான். படத்தில் இதே போன்ற வரிகள் உள்ளன. இந்தப்படம் ரத்தம் தோய்ந்த கதை மட்டுமல்ல, காதல் மற்றும் அறம் கலந்த கதை. இந்த படம் கேஜிஎஃப் மற்றும் புஷ்பாவில் இருந்து முற்றிலும் மாறுபட்ட படம் என்றார்.

துருவா சர்ஜா பேசுகையில், "சஞ்சய் தத் ஒரு லெஜன்ட். KD டீசர் பார்வைக்கு ஒரு ஆக்சன் கலந்ததாக இருந்தாலும் குடும்ப பார்வையாளர்களை கவரும் வகையில் உள்ளது. KD மீது எனக்கு பெரும் நம்பிக்கை உள்ளது, பார்வையாளர்கள் கண்டிப்பாக ரசிப்பார்கள்" என்றார்.

நடிகர் சஞ்சய் தத் பேசுகையில்.., "நான் இப்படத்திற்காக மிகவும் ஆவலுடன் காத்திருக்கிறேன். குழுவிற்கு நல்வாழ்த்துக்கள் மற்றும் KVN Productionsக்கு வாழ்த்துக்கள். நான் தொடர்ந்து தென்னிந்திய படங்களில் அதிகமாக வேலை செய்யப் போகிறேன் என்று நினைக்கிறேன், எனவே இந்த வாய்ப்பிற்காக மீண்டும் நன்றி பிரேம் சார் மற்றும் KVN Productions மற்றும் அனைவருக்கும் நன்றி. டீசர் பார்த்து கொண்டாடுங்கள்!" என்றார்

ரக்ஷிதா (நடிகை/இயக்குனர் பிரேமின் மனைவி) பேசுகையில், "சஞ்சய் தத் சார் இல்லாமல் இந்த நிகழ்வு முழுமையடைந்திருக்காது அவருக்கு நன்றி. திரு. அனில் ததானியின் ஆதரவு மகத்தானது அவருக்கு பெரிய நன்றி. இந்த படம் துருவா சர்ஜாவுக்கு ஒரு புதிய தொடக்கமாக இருக்கும்" என்றார்.

தமிழ் பதிப்பை உதயநிதி ஸ்டாலினின் ‘Red Giant Movies’ வழங்கவுள்ளது. KD The Devil டைட்டில் டீஸர் படத்தின் விண்டேஜ் உலகத்தைப் பற்றிய ஒரு பார்வையை நமக்கு வழங்குகிறது. டைட்டில் டீசரில் ரத்தம் தெறிக்கும் அதிரடி ஆக்சன் பிரமிக்க வைக்கிறது. டீசர் வெளியானவுடனேயே அனைத்து மொழிகளிலும் அமோக வரவேற்பைப் பெற்றது!

இதையும் படிங்க: பிரின்ஸ் படத்தால் விஜய் ரசிகர்கள் கலக்கம் - என்னவாம்?!

ABOUT THE AUTHOR

...view details