ஒவ்வொரு நட்சத்திர நடிகர்களும் தங்களது பிறந்த நாளை ரசிகர்களுடன் கொண்டாடுவது இயல்பு. இந்நிலையில் சென்னை கிறிஸ்தவ மகளிர் கல்லூரியில் நடைபெற்ற 'Battle Fest 2022' என்னும் விழாவில் கலந்து கொண்ட நடிகர் துருவ் விக்ரம், மாணவிகளுடன் தனது பிறந்த நாளை கொண்டாடி மகிழ்ந்தார்.
அதன் போது, துருவ் விக்ரமின் பிறந்தநாள் என்பதை அறிந்த கல்லூரி மாணவிகள், கேக் வெட்டி, அவருக்கு வாழ்த்து தெரிவித்தனர். இதனையடுத்து மாணவிகளின் வேண்டுகோளுக்கு இணங்க அவரின் இசையில் வெளியான 'மனசே..' என்ற இண்டிபெண்டன்ட் ஆல்பத்தை பாடினார். பாடி முடித்ததும் மாணவிகள் கரவொலி எழுப்பி அவரை பாராட்டினர்.