சென்னை:இயக்குநர் வெங்கி அட்லூரி இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடித்து வெளியாகவுள்ள திரைப்படம் ‘வாத்தி’. இப்படம் தமிழ், தெலுங்கு ஆகிய இரு மொழிகளில் வெளியாகவுள்ளது. இதனை தமிழில் 'வாத்தி' என்ற பெயரிலும், தெலுங்கில் 'சார்' என்ற பெயரிலும் ரிலீஸ் செய்யவுள்ளனர்.
சித்தாரா என்டர்டெயின்மெண்ட்ஸ் நிறுவனம் சார்பில் நாகவம்சி தயாரிக்கும் இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார். 'வாத்தி' படத்தில் நடிகர் தனுஷுக்கு ஜோடியாக சம்யுக்தா மேனன் நடித்துள்ளார். தனுஷ் நடிப்பில் கடைசியாக கடந்த ஆண்டு 'நானே வருவேன்' என்ற படம் வெளியானது. தனது அண்ணன் செல்வராகவன் இயக்கத்தில் தனுஷ் நடித்திருந்தார். இப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றது.