தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / entertainment

தனுஷ் - அருண் மாதேஸ்வரன் இணையும் ’கேப்டன் மில்லர்’..! - கேப்டன் மில்லர்

நடிகர் தனுஷ் - இயக்குநர் அருண் மாதேஸ்வரன் இணையும் புதிய படத்தின் அறிவிப்பு வெளியாகியுள்ளது.

தனுஷ் - அருண் மாதேஸ்வரன் இணையும் ’கேப்டன் மில்லர்’..!
தனுஷ் - அருண் மாதேஸ்வரன் இணையும் ’கேப்டன் மில்லர்’..!

By

Published : Jul 2, 2022, 8:54 PM IST

சென்னை: இயக்குநர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில், தனுஷ் நடிப்பில், சத்ய ஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரிப்பில் உருவாக உள்ள ‘கேப்டன் மில்லர்’ படத்தின் அறிவிப்பு இன்று (ஜூலை 2) வெளியாகியுள்ளது. ‘ராக்கி’, ‘சாணி காயிதம்’ படங்களைத் தந்த அருண் மாதேஸ்வரன் இந்தப் படத்தை 1930-40களின் பின்னணியில் பீரியட் ஃபிலிமாக எடுக்க உள்ளார். தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் ஒரே நேரத்தில் வெளியாகவுள்ளது.

இதுகுறித்து தயாரிப்பாளர் T.G. தியாகராஜன், கூறும்போது, “எங்கள் தயாரிப்பு நிறுவனத்தில், பிரமாண்டமான அளவில் உருவாகும் நம்பிக்கைக்குரிய திரைப்படங்களில் ஒன்றாக இப்படம் இருக்கும். ‘கேப்டன் மில்லர்’ படத்தை அறிவிப்பதில் மகிழ்ச்சியடைகிறேன்.

நடிகர் தனுஷுடன் பணிபுரிவது எப்பொழுதும் மிகுந்த மகிழ்ச்சியைத் தரும், ஏனெனில் எங்களின் கூட்டணியில் வெளியான முந்தைய திரைப்படங்கள் பெரிய வெற்றியைப் பெற்றுள்ளன. இயக்குநர் அருண் மாதேஸ்வரன் எனக்கும், தனுஷுக்கும் ஸ்கிரிப்டை விவரித்தபோது, நாங்கள் இருவரும் உற்சாகமானோம், மேலும் பெரிய அளவில் இதனை உருவாக்க விரும்பினோம்.

இயக்குநர் அருணின் வழக்கத்திற்கு மாறான சிந்தனை மற்றும் விதிவிலக்கான படைப்புகளை வழங்கும் முயற்சி, மாறுபட்ட அவரது திரைப்படத் தயாரிப்பு முறைகள் என அனைத்தும் எனக்கும் மிகவும் பிடிக்கும். அவர் ஸ்கிரிப்டை விவரித்தபோது, அவரது சிந்தனை மற்றும் அவரது திரைக்கதையால் மிகவும் ஈர்க்கப்பட்டேன்.

இசையமைப்பாளர் ஜீ.வி.பிரகாஷின் தனித்துவமான இசை இந்தப் படத்தின் தரத்தை மேலும் உயர்த்தும். இந்தப் படத்தில் நடிக்கும் ஒவ்வொரு நடிகரும், தொழில்நுட்பக் கலைஞர்களும் ஏற்கனவே தங்களுக்கென சிறப்பான ஒரு இடத்தைச் செதுக்கியிருக்கிறார்கள், மேலும் அவர்களின் பங்களிப்பு ‘கேப்டன் மில்லரை’ பெரிய அளவில் கொண்டு செல்லும்" என்றார்.

இந்தத் திரைப்படம் சிறந்த முறையில் உருவாக்க, ஒரு குழு ஒரு வருடமாக, தயாரிப்பு பணிகளிலும், ஆய்வுப் பணிகளிலும் ஈடுபட்டுவருகிறது. இந்தத் திரைப்படத்திற்கு நட்சத்திர நடிகர்கள் மற்றொரு ஈர்க்கும் அம்சமாக இருப்பார்கள். இத்திரைப்படம் தமிழ் சினிமாவில் புதியதாகவும் கவர்ச்சிகரமான படைப்பாகவும் இருக்கும். உண்மையில், இந்தத் திரைப்படத்தின் நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப குழுவினர் பேனர் மதிப்புக்காக அல்லாமல், அந்தந்த துறையினுள் சாதனை புரிந்த, சிறந்த திறமைகளின் அடிப்படையில் இறுதி செய்யப்பட்டுள்ளனர். இதில் நடிக்கும் நடிகர்கள் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும்.

இதையும் படிங்க: விஜய்தேவரகொண்டாவின் 'துணிச்சல்மிகு' பட போஸ்டர்!

ABOUT THE AUTHOR

...view details